சென்னை:

மிழகத்தில் காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருளுக்கான படி வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில்  இன்று மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விதி 110ன் கிழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினர் சம்பந்தமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில்,

72,000 காவலர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் எரிபொருள் படி வழங்கப்படும் 

காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 3000 ஆக உயர்வு
 
காவல் துறையினரின் குறைகளை போக்க காவல் துறை ஆணையம் அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது

காவல்துறை ஆனையம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்

ரூ.1 கோடி செலவில் 50 ஆளில்லா விமானங்கள், டிரோன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்கள் வாங்கப்படும் 

திருப்பூர் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்படும்.

ரூ.8.54 கோடியில் 1500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களுடன் கூடிய உடைகள் வழங்கப்படும்

4-வது காவலர் ஆணையம் அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது

தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, தருமபுரி மாவட்டங்களில் ரூ.14.75 கோடியில் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உருவாக்கப்படும்

  உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.