இந்திய ரயில்வேயில் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றது.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்று விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவிததுள்ளது.
இது குறித்து அந்நாளிதழ் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போதே இத்திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் அதனை அப்போதைய பிரதமர் மன்மோகன் அரசு செயல்படுத்தவில்லை. தற்போது பிரதமர் மோடி இந்த திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் படி, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களின் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் நிறுவனங்களிள் வசம் செல்லும். அவர்களது நிறுவன தயாரிப்புகளை ரயிலின் உள் மற்றும் வெளிப்புறங்களில் விளம்பரம் செய்யப்படும்.
ரயில் நிலையங்களிலும் அவர்களே விளம்பரம் செய்து கொள்வார்கள். பிற நிறுவனங்களின் விளம்பரங்களை பெப்சி, கோக் அனுமதிக்குமா என்பது குறித்து தற்போது தகவல் ஏதும் இல்லை. இந்த இரு நிறுவனங்களும் விளம்பர உரிமைக்கு ஈடாக இந்தியன் ரயில்வேக்கு பெரும் தொகையை அளிக்கும்.