நடிகர் ஓம்புரி கொலையா? போலீசார் புதிய வழக்கு

Must read

மும்பை,

பிரபல இந்தி நடிகர் ஓம்புரி மரணம் குறித்து போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரல இந்தி நடிகர் ஓம் புரி (66) கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஓம் புரியின் சடலம், சமையலறையில் காணப்பட்டதாக அண்டை வீட்டினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது உடல் படுக்கைக்கு அருகிலேயே இருந்ததாக வீட்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  அத்துடன், அவரது தலையிலும் காயம் இருந்தது.

ஆகவே தற்போது காவல்துறையினர்,  சந்தேக மரணம் என்று வழக்கை மாற்றி விசாரித்து வருகின்றனர்.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article