சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அனைத்து தமிழக மக்களும் பங்கு பெற வேண்டியது கடமை என கமலஹாசன் கூறி உள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து 40 நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.  நேற்று இதையொட்டி சுமார் 20000 க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   போராட்டத்துக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அத்துடன் ஸ்ரீவைகுண்டம், புதியம்புதூர் பகுதி மக்களும் கடையடைப்பில் ஈடுபட்டு ஆதரவை தெரிவித்துள்ளனர்.  மேலும் மீன்வர்களும், உப்பளத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.   தமிழ்நாடெங்கும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு பெறுகி வருகிறது.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழக மக்களும், ஊடகங்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெற வேண்டியது அவர்கள் கடமை.   நானும் தூத்துக்குடி மக்களுடன் இருக்கிறேன்.   போராட்டக் களம் விரும்ட்பினால் நானும் வருவே”  என பதிந்துள்ளார்.