மோடியின் கோட்டையை ஆட்டம் காண வைக்கும் பிரியங்கா…. வாரணாசியில் அதகளம்

Must read

லக்னோ:

உ.பி.யில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வரும் பிரியங்காவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக மோடியின் கோட்டை ஆட்டம் காணுகிறது… இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட  பிரியங்கா காந்தி உ.பி.யில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரியங்காவின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் கங்கை நதியில் படகுமூலம் சென்று கரையோர மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த பிரியங்கா, உ.பி.யில் போட்டியிடும் தனது தாய் மற்றும் சகோதரர்களுக்காகவும் பிரசாரம் செய்து வந்தார்.

தற்போது மோடி போட்டியிடும்  வாரணாசியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை வாரணாசியில் நடைபெற்ற  மிகப்பெரிய அளவில் பிரச்சார பேரணியில் பிரியங்கா கலந்துகொண்டார். பேரணியின்போதே  அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரியங்கா உரையாற்றினார்.  மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து,  வாரணாசியில் உள்ள கிராமங்களுக்கு  சென்று பொதுமக்களை சந்தித்தார். அங்குள்ள மக்களிடையே பேசிய பிரியங்கா காந்தி, இந்த தொகுதி மோடி தொகுதி, அவர்  உங்களுக்கு என்ன செய்தார் என்று  கேள்வி எழுப்பினார்.

வாரணாசியில்  பிரியங்காவுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். பிரியங்காவை பார்க்கும்போது, இந்திரா காந்தியே நேரில் வந்துள்ளது போல் தெரிவாக பொதுமக்கள் பேசினர்.

பிரியங்காவுக்கு வாரணாசி தொகுதியில் கிடைத்த வரலாறு காணாத வரவேற்பு பாஜகவினர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. மோடி வெற்றிபெறுவாரா என்று பாஜகவினர் மத்தியில் சந்தேகம் எழும்பி உள்ளது. இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் பாஜகவினர் முழிபிதுங்கி உள்ளனர்.

இதற்கிடையில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.

More articles

Latest article