சிகலா உறவினரை முதல்வராக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏவான  நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இந்த நிலையில், எப்பக்கமும் சேராமல் இருந்த சில எம.எல்.ஏக்களில் ஒருவரான மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நட்ராஜ், “சசிகலா உறவினரை முதல்வராக மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ, “அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள், நட்ராஜ் ஐ.பி.எஸ்ஸை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.