சென்னை:

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தீபமேற்றி தமிழகத்தை ஒளிரச்செய்தனர்.

ஜாதி மத வேறுபாடின்றி, அனைத்து தரப்பினரும், இரவு சரியாக 9 மணி அளவில் தங்களின் வீடுகளில் உள்ள மின்சார  விளக்குகளை அணைத்துவிட்டு, தங்களிடம் இருந்த அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும், செல்போன் லைட்டுகளை 9 நிமிடம் ஒளிரச் செய்தனர்.

நாங்கள் என்றும் ஒற்றுமையாக இருப்போம்,  எங்களுக்காக இரவுபகல் பாராது பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினருக்கு  ஒத்துழைப்பு வழங்கி, கொரோனாவை ஒழிப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அனைவரும் தங்களது வீடுகளிலும், மாடிகளிலும், வீட்டுவாசல்களிலும் விளக்கை ஏற்றி ஒற்றுமை வெளிப்படுத்தி உள்ளனர்.

[youtube-feed feed=1]