சென்னை: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ சென்னையில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்றும்  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் உள்பட பல மழைக்கால நோய்தொற்றுகள் அதிகரித்து வருகிறது. மேலும்,  கொசு தொல்லை காரணமாக டெங்குவும் அதிகரித்து உள்ளது. இதை தடுக்க தமிழகஅரசு மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி சிகிச்சை அளித்துவருகிறது.

இந்த நிலையில், மெட்ராஜ் ஐ எனப்படும் கண் வெண்படல அழற்சி நோய்தொற்றும்  சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மெட்ராஸ் ஐ பாதிப்பால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மெட்ராஸ் ஐ நோய்க்கு  தினசரி 4,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வும்,  இதுவரை 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.  இந்த நோய் பாதிப்பு காரணமாக, இதுவரை  யாருக்கும் இதுவரை கண்புரை ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார்.

மேலும்,  மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,   இந்நோயை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிசிக்சை வழங்கப்படுகிறது. இந்நோய் பரவும் தன்மையுடையது என்பதால், மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன்,  நோய் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருடன் இருந்து தங்களைதனிமைப்படுத்திக் கொள்வருது நல்லது, மெட்ராஸ் ஐ நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.