சென்னை: ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நாளைய தினம், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும் இன்று இரவு 9 மணியுடன் முழு ஊரடங்கு நிறைவு பெற்றுவிட்டது. எனவே நாளை முதல் முழு ஊரடங்கில் சற்று தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது முன்பு இருந்தபடி ஊரடங்கு தொடரும் என அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் பழைய நிலை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை மட்டும் மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றும் அதன்பின் மே 1ம் தேதி முதல் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
https://twitter.com/journovivek/status/1255520802042232832
இந் நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன், அனைத்து தரப்பினரும் நாளை ஊரடங்கு தளர்வு என்ற போதிலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: அவசியம் இருப்பவர்கள் நாளை கடைகளுக்குச் சென்று பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரவேண்டும். கூடுமானவரை நடந்து சென்றே பொருட்களை வாங்கி கொள்ளலாம். பொருட்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கோயம்பேட்டில் பொதுமக்கள் சென்று காய்கறிகள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு பொதுமக்கள் அங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.