சென்னை:

மிழகத்திற்குள் கொரோனா தொற்று ஊடுருவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்களும் அரசுக்கு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்  உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியா உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,  பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க சீனாவை போன்று “கான்டாக்ட் டிரேஸ்” முறையில் சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

“கான்டாக்ட் டிரேஸ்” முறை என்பது,  பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவது தடை செய்யப்படுவது. மேலும், நோய் பாதித்தவர்கள், அவர்களுடன்  தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருவதற்கு  “காண்டாக்ட் டிரேஸ்” என்று அழைக்கப்படுகிறது.

இதுபோன்றே சிங்கப்பூரிலும்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் முன்கூட்டியே அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியதன் மூலம் இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளிலும் “காண்டாக்ட் டிரேஸ்” நல்ல பலனை கொடுத்துள்ளது.

அந்த முறையை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது தமிழக அரசு.  இதன்படி, கொரோனா பாதித்தவரின் குடும்ப உறுப்பினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. அதன்படி,  கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்28 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சையளிக்கப்படும். உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள தகவலில்,

தமிழகத்தில் இதுவரை 122318 பேருக்கு விமான நிலையங்களில்  கொரோனா ஸ்கிரீன் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இவர்களில் 1088 பேர் கொரோனா அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 68 பேரின் ரத்தங்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் 64 பேரின்  ரத்த பரிசோதனை சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்டதாகவும், 4 பேரின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

சென்னையில் நடத்தப்பட்ட 64 பேரின் ஆய்வுகளில் 55 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பது தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், 8 பேரின் ஆய்வுகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள தமிழக அரசு, புனேவுக்கு அனுப்பப்பட்ட 4 சோதனை களும் நெகடிவ் என வந்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.