கொழும்பு

இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை முழுவதும் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக கடும் மின் தடையை அனுபவித்து வருகிறது. இந்த மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணையத் தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை மின்சார சபை மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில்  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் செய்தி தொடர்பாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டரை மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளது.

ஏற்கனவே அந்நியச் செலாவணி கையிருப்பு 70 சதவீதம் வீழ்ச்சியடைந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை தற்போது மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாடு தழுவிய ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

[youtube-feed feed=1]