சென்னை
நள்ளிரவில் சென்னையில் கடல் உள்வாங்கியதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை நகரில் நேற்று நள்ளிரவு மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் திடீரென உள்வாங்கி உள்ளது.
சுமார் 10 முதல் 15 மீட்டருக்கு நள்ளிரவில் கடல் உள்வாங்கி உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர்.
சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு கடல் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது.