போடி:  துணைமுதல்வர் ஓபிஎஸ் தனது சொந்த தொகுதியான போடியிலேயே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது,  அந்த பகுதி பொதுமக்களால் விரட்டியடிக் கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முதன்முதலாக தனது தேர்தல் பிரசசாரத்தை அரண்மனை புதூரில் தொடங்கினார். தொடர்ந்து தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தார். முதல்நாள் பிரசாரத்திலேயே பல பகுதிகளில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது பிசாரத்துக்கு பல பகுதிகளில்  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல,  அங்கு ஒரு சமுதாயத்தினரிடையே வாக்குகளை பெறும் நோக்கில், சென்றபோது, அங்கு சிறைபிடிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தலையிட்டு அவரை மீட்டு சென்றனர்.

இந்த நிலையில்,இன்று சென்னை வந்த ஓபிஎஸ்- செய்தியாளர்களை சந்தித்தார். அபபோது,  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செயல்படுத்தக்கூடியது என்றும், அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை செயல்படுத்த முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். அண்ணா தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் செயல்படுத்துவோம். எங்களின் தேர்தல் அறிக்கையை பற்றி மு.க. ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. அண்ணா தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.