சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் அறிவித்துள்ளார்

ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.  இது இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் எனக் கூறப்படுகிறது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வ்ருகிற்து.  சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவல் அதிகம் உள்ளது.

இதையொட்டி தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது.   மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  திரையரங்குகள் மூடப்பட உள்ளன   மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட பல கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்,

“தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்த பாதிப்பைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.,  வீண் பதற்றம் அடைய வேண்டாம்.

கொரோனா நோயாளிகளுக்காக மாநிலத்தில் 1.16 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.  ஆயினும் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்சிஜன் பாதிப்பு இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். 

அதே வேளையில் ஆக்சிஜன் பாதிப்பு இல்லாவிட்டால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம்.

கடந்த 3 மாதங்களில், 99.8% டெல்டா பாதிப்புக்கள் இருந்தன, இப்போது நிலைமை மாறிவிட்டது. கடைசி மரபணு வரிசை அறிக்கையின்படி, 65% ஒமிக்ரான் மற்றும் 35% டெல்டா ஆகு உள்ளது.

இனி அடுத்த மரபணு வரிசைமுறையின் முடிவுகள் 90-95% ஓமிக்ரானைக் காண்பிக்கும். இப்போது மாநிலத்தில் ஒமிக்ரான் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது”

எனத் தெரிவித்துள்ளார்