தோஹா

ற்ற அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியதை தொடர்ந்து சுற்றுலா வருவாயைப் பெருக்க விசா இல்லாமல் பயணம் செய்ய இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

எண்ணெய் வளம் மிக்க நாடு கத்தார்.  இந்த நாடு பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாகச் சொல்லி, எகிப்து, போன்ற மற்ற 4 அரபு நாடுகள் கத்தாருடன் உறவை முறித்துக் கொண்டன.   விமானப் போக்குவரத்து அடியோடு கத்தாருடன் நிறுத்தப்பட்டது.   மேலும் இந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து விட்டது.

இதை தொடர்ந்து கத்தார் தனது நட்புறவை மற்ற நாடுகளுடன் விரிவாக்கத் தொடந்த்கியது.   துருக்கி, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள் வரத் துவங்கியும்,  ஓட்டல் தொழில் சுற்றுலா பயணிகளின் வருகையின்மையால், மந்தமடைந்தது.   இதை சீராக்கும் நடவடிக்கைகளில் கத்தார் இறங்கியது.

அதன்படி தற்போது 80 நாடுகளில் உள்ள மக்களுக்கு விசா இல்லாமல் கத்தார் நாட்டுக்கு வர அனுமதி அளித்துள்ளது.   பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும்.   கத்தார் விமான நிலையத்திலேயே டூரிஸ்ட் விசா வழங்கப்பட்டு விடும்.    இது போல அனுமதி அளித்துள்ள 80 நாடுகளில் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் 180 நாட்கள் தங்க முடியும்.  மற்ற 47 நாடுகளில் உள்ள மக்கள் 30 நாட்கள் வரை தங்கலாம்

இது தவிர கத்தாரில் பணி புரியும் வெளிநாடு வாழ் மக்களுக்கும் பல சலுகைகளை கத்தார் அரசு அளித்துள்ளது.

வரும் 2022 ஆம் வருடம் நடக்கும் உலகக் கோப்பை சாசர் போட்டிகளை நடத்தப் போகும் கத்தார் நாட்டுக்கு இது மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க வழிவகை செய்யப்படும் என நம்பப்படுகிறது.