உக்ரைன் ராணுவம் தனது கையில் உள்ள ஆயுதங்களைக் கீழே போடும் வரை ரஷ்யா-வின் வழியில் குறுக்கிடுபவர்கள் யாராக இருந்தாலும் அதன் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்ற புடினின் போர் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழியப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தஞ்சமடைந்துள்ள மக்கள்

உக்ரைனில் சிவில் சட்டம் முடக்கப்பட்டு நாட்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுள்ளார் உக்ரைன் அதிபர் ஸிலென்ஸ்கி.

ஏ.டி.எம்.களில் வரிசை கட்டி நிற்கும் மக்கள்

இதனால் உக்ரைனில் உள்ள வெளிநாட்டினர் மட்டுமன்றி அங்குள்ள மக்களும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்கும் வாகனங்கள்

தலைநகர் கிவ் மட்டுமன்றி உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள ராணுவ தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்ற குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

உக்ரைனை விட்டு வெளியேறிச் செல்லும் வாகனங்கள்

உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதால் உக்ரைனை விட்டு போலந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று தஞ்சமடைய ஏராளமான மக்கள் சாலைகளில் சாரை சாரையாக வாகனங்களில் வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை…. பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது….