திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதால், இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிகிச்சைக்காக தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து 1500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவு உட்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் 120 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் 350 செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இங்கு சில மாதங்களாக நிலவும் தொடர் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனையால் அறுவை சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து மின்தடையை சமாளிக்க வாங்கப்பட்ட ஜெனரேட்டர் மற்றும் இன்வெக்டர்கள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அவசர சிகிச்சையின் போது பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதை தொடர்ந்து கடந்த மாதம் மின் பற்றாக்குறை காரணமாக இங்குள்ள டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் மொத்தமாக செயலிழந்தன. மேலும் அறுவை சிகிச்சை நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் மருத்துவர்கள் இருளில் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையம் ஏற்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மின்வெட்டு காரணமாக குடிநீர் மின் மோட்டார்கள் தொடர்ந்து பழுதடைந்து வருகின்றது. இதனால் அவசர மற்றும் அறுவை சிகிச்சைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நோயாளிகளின் உறவினர்களுக்கும் குடிக்க கூட தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் கேட்ட போது மின்சார பற்றாக்குறை இருப்பது உண்மைதான் என தெரிவித்தார். இதையடுத்து விரைவில் மின் தட்டுப்பாட்டுக்கும் தண்ணீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும் என்று அவர்