சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் என முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். மேலும் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த நிலையில், அவரை சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டார். இதையடுத்து, அவர் பாஜக தலைமை மூலம் அதிமுகவில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், ஒபிஎஸ், டிடிவி போன்ற முன்னாள் அதிமுக தலைவர்களை மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனியே பேசி வருவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்சும் கடந்த வாரம் டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துபேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ள தகவல்கள் பரவிய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்து பொதுக்குழு நடத்துபவர்களிடம்தான் கேட்க வேண்டும். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே, பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…