shutterstock_89863756-800x430

உலகில் நாளுக்கு நாள் மக்களிடையே, செரிமானமாகாத உணவுகளின் மோகம் அதிகரிக்க துவங்கிவிட்டது. ஜங் வகை உணவுகளை மக்கள் தினமும் தங்களுடைய மெனுவில் சேர்க்க துவங்கிவிட்டனர். விளைவு விரைவிலேயே உடல் எடை அதிகரித்து குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சுவிஸ்லாந்தில் சமீபத்தில் நடந்த ஆய்வில், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் உடல் எடை அதிகரித்து அவதிப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லாசான்னே பல்கலைக்கழகமும், சுவிஸ்லாந்தின் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில், 2000 இளைஞர்களில் 44% பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக உள்ளனர். பெண்களை விட ஆண்களே இருமடங்கு பேர், உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மத்திய உணவு பாதுகாப்பு அலுவலகம் ஆலோசனைப்படி உணவில் 5% பழங்கள் மற்றும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்ட 13% மேற்பட்டோர் இந்த சிக்கலில் இருந்து மீண்டுள்ளனராம்.