அதிபர் தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு: ஹிலாரிக்கு சாதகமா? பாதகமா?

Must read

வாஷிங்டன்.
டைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் 3.5 கோடி பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டு சாதனை படைத்துள்ளனர். இந்த ஓட்டின் முடிவு : ஹிலாரிக்கு சாதகமா? பாதகமா? என விவாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 3.5 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்த மாதம் 8ந்தேதி நடைபெற இருக்கும்  அமெரிக்க அதிபர் தேர்தலில்,   ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகிறார்கள்.
தற்ேபாது உள்ள கருத்துக்கணிப்பு படி இருவரும் தலா 45 சதவீதம் வாக்குகள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.  இருந்தாலும் வாராவாரம் கருத்து கணிப்பில் வித்தியாசம் ஏற்படுகிறது.
ஹிலாரிமீதான  இமெயில் குற்றச்சாட்டு வெளியே வருவதற்கு முன் வரை  12 சதவீதம் டிரம்ப்பை விட முன்னிலை பெற்று இருந்தார்.  ஆனால், நாட்கள் குறைய குறைய இருவரது வாக்கு நிலவரமும் சரிசமமாக உள்ளன.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் முன்கூட்டியே அதிக வாக்காளர்கள் ஓட்டு போட்டு வருவது இருதரப்பினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டு போட 8ம் தேதி வரை காத்திருக்க வேண்டாம். முன்கூட்டியே ஓட்டு போடும் வாய்ப்புகள் அங்கு உள்ளன.
trumb
அமெரிக்காவில் மொத்த ஓட்டு 12.60 கோடி. 2008ல் தான் அதிகபட்சமாக 29.7 சதவீத ஓட்டுகள் முன்கூட்டியே பதிவானது. 2012ல் 3.23 கோடி ஓட்டுகள் முன்கூட்டியே பதிவானது.
இது 31.6 சதவீதம் ஆகும். 2016ல் நேற்று வரை 3.5கோடி ஓட்டுகள் பதிவாகி விட்டன. இமெயில் விவகாரத்தில் செல்வாக்கு சரிவதை தடுக்க முன்கூட்டியே வாக்களிக்க ஹிலாரி, அவரது கணவர் கிளிண்டன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.  பலரும் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.
இதில் 75 சதவீத ஓட்டுகள் ஹிலாரிக்கு ஆதரவாக பதிவாகி உள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் அதை டிரம்ப் நம்ப மறுத்து வருகிறார். மக்களின் ஒட்டு எனக்குத்தான் என்று கூறி வருகிறார்.  மக்கள் மனநிலையை மாற்றவே இதுபோல் செய்திகள் பரப்பப்படுகிறது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக, மக்கள்  முன்கூட்டியே வாக்களிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் மக்கள் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து தேர்தல் கணிப்பாளர் மைக்கேல் மெக்டொனால்டு கூறியதாவது:
அனைத்து மாகாணங்களிலும் முன்கூட்டியே ஓட்டு போடும் சதவீதம் இந்த தேர்தலில் அதிகரித்து உள்ளது. இந்த தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு போடும் சதவீதம் 35 சதவீதத்தை தாண்டி விடும் என்றே நினைக்கிறேன்.
இந்த தேர்தலில் தங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர். தங்கள் வேட்பாளர் யார்?, புறக்கணிக்க வேண்டிய வேட்பாளர் யார் என்பதை அவர்கள் தெளிவாக முடிவு செய்து வைத்துள்ளனர்.
அதே போல் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற முடிவிலும் தெளிவாக உள்ளனர். இதுதான் முன்கூட்டியே மக்கள் வாக்களிப்பதற்கு காரணம். எனது கணிப்பின் படி ஏற்கனவே அவர்கள் ஒரு வேட்பாளரை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துள்ளார்கள்.
அவர்களைப்பற்றி மீதம் உள்ள நாட்களில் ஏதாவது தவறான தகவல் வந்து முடிவை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் முன்கூட்டியே அதிகம் பேர் வாக்களிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
hillary-clinton
இதற்கிடையில்,  ஹிலாரி வெற்றி பெற 1008 தேங்காய் உடைக்க இலங்கை தமிழர்கள் முடிவு
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலை புலிகளுக்கும் அரசுக்கும் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த 2009ல் ராஜபக்சே ஆட்சியின்போது முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த சிறிசேனா தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதாக தெரிவித்தார். ஆனாலும் இதுவரை வடக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் வெளியேற்றப்படவில்லை.
ராணுவம் ஆக்கிரமித்த நிலங்களும் தமிழர்களிடம் திருப்பி தரப்படவில்லை. எனவே அமெரிக்காவின் உதவியின்றி இந்த கோரிக்கைகள் நிறைவேறாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது.
எனவே வரும் 8ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி வெற்றி பெற்றால் தான் சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆதரவாக இருக்க முடியும் என அதன் கூட்டமைப்பின் பிரதிநிதி சிவலிங்கம் நம்புகிறார்.
இதையடுத்து ஹிலாரிக்கு தங்கள் ஆதரவு மற்றும் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் வரும் 8ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தசாமி கோயிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
மேலும் அங்குள்ள தேவாலயத்தில் 1008 மெழுகுவர்த்திகளை ஏற்றியும் பிரார்த்தனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article