மறதி டிரைவர்களுக்கு அபராதம் மட்டுமே!! உயர்நீதிமன்றம்

Must read

சென்னை:

‘‘அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க மறந்து வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் மட்டும் போதுமானது’’ என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை எடுத்து வராதவர்களுக்கு அதிகபட்சம் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து கூறுகையில்,

‘‘பாஸ்போர்ட் நகலைக் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமா?. அதேபோல் அசல் ஓட்டுநர் உரிமமும் அவசியம். நகல் பாஸ்ப்போர்ட்டை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முடியாது. அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்து வாகனம் ஓட்டுபவர்களை தவறாகக் கருத முடியாது.

அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்க வேண்டிய அவசியமில்லை. மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு சிறை தண்டனை வழங்கலாம். ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கும், ஓட்டுநர் உரிமத்தை மறந்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கும் வித்தியாசம் உள்ளது’’ என்றார்.

More articles

Latest article