பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே `பெண் விடுதலை’ கட்சித் தலைவரான முன்னாள் ஆசிரியை சபரிமாலாவின் கார் உடைக்கப்பட்டது. அதிமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த சபரிமாலா நீட் தேர்வுக்கு எதிராகத் தனது ஆசிரியர் பணியைத் துறந்தார். பெண்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சபரிமாலா, `பெண் விடுதலை’ என்ற பெயரில் கட்சியையும் தொடங்கினார். தமிழக சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத்தாக்கலும் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சபரிமாலா, வே தி.மு.க-வுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வந்தார்.
இவரது பரப்புரை காரணமாக, கடந்த மாதம் 28ந்தேதி பொள்ளாச்சி பிரசார களத்தில் தி.மு.க – அ.தி.மு.க இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. சபரிமாலா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகர் பகுதியில் `பெண் விடுதலை’ கட்சித் தலைவரான முன்னாள் ஆசிரியை சபரிமாலாவின் கார் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.