வாஷிங்டன்:
தனது அரசியல் எதிரிகளை வீழ்த்தி அயல்நாட்டு உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, டிரம்ப் மீது இம்பீச்மென்ட் தீர்மானத்தை அறிவித்து உள்ளார். பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ”குப்பை” என்று கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர், அதிபர் டிரம்ப் தனது எதிராளி களை வீழ்த்தும் நோக்கில், உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி மூலம்உரையாடல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், யூகத்தின் அடிப்பைடயில் செய்திகள் வெளியானது. அதில், அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அளித்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று மிரட்டியதாக, ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கூறிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, இது தேசிய பாதுகாப்பு துரோகம் என்றும், அதிபர் டிரம்ப் ‘இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், தற்போது அதிபர் டிரம்ப் மீது இம்பீச்மென்ட் தீர்மானத்தை அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் ஆதரவு அளித்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில், பிரதிநிதிகள் சபையின் இம்பீச்மென்ட் தீர்மானத்துக்கு ஒப்புதல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக டிரம்ப் மீதான தகுதிநீக்கம் தீர்மானம் தோல்வி அடையும் என்று நம்பப்படுகிறது.