யநாடு

 பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

வரும் 26 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் பிரியங்கா காந்தி,

“மக்களுக்காகப் பிரதமர் மோடி மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சினையில் இருந்து தை திசை திருப்புகிறார்.  பிரதமர் மோடி விலைவாசி உயர்வு, மக்களைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பிரதமர் தவறிவிடு அதற்கு பதிலாகப் பொருத்தமற்ற விசயத்தில் கவனம் செலுத்துகிறார். 

தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை பாதுகாப்பதற்கான வாய்ப்பு இந்த மக்களவைத் தேர்தல் ஆகும். நாம் அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. 

பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றம், உண்மையான பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது. அதைப் போல் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது.” 

என்று கூறி உள்ளார்.