டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடர்பான பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க உள்ளதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ.நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்,  பிரபல பத்திரிகையாளர்கள் என  பலரிடன் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில்  இந்து என்.ராம் உள்பட பலர் தரப்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில்,  பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு விவாதம் நடத்த வேண்டும் என்று கூறி,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கின.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மத்தியஅரசு தரப்பில்,  இரண்டு பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,பெகாசஸ் உளவு புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என  உறுதி அளித்துள்ளது. அதேவேளையில்,  பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாடு உண்மைஅல்ல, அதை மறுப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசின் பிரம்மான பத்திரிகை ஏற்க நீதிபதிகள், விசாரணை குழு அமைக்க  10 நாட்கள் காலஅவகாசம் அளித்துள்ளது. தேர்வுக் குழுக்களின் பரிந்துரைகளைப் பொருட்படுத்தாமல் தீர்ப்பாயங்களுக்கு நியமனம் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.