சென்னை:
அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவை கலைக்க வேண்டும் என்று ஜெ.சி.டிபிராபகர் பேசும் போது கேட்டுக் கொண்டார் .
இதன் பிறகு ஒ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை குழு இன்றோடு கலைக்கப்படுகிறது. அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர்’’ என்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியவுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.