புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவிற்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது – என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்தவக்கல்லூரி திறப்பு விழாவில் கலந்துகொள்ள திமுக எம்எல்ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சென்ற போது கைது செய்யப்பட்டனர். இதில் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் இன்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் திமுக ஆர்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவிற்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. அரசு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. முதலில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திமுக எம்எல்ஏக்கள் பெயர்கள் இல்லை.

புதுக்கோட்டை மருத்துவக்கலூரிக்கு திமுக ஆட்சியில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. திறப்பு விழாவிலேயே கையை வெட்டிக் கொண்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் புறநோயாளி எடப்பாடி பழனிசாமி தான். அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனநாயகம் நோயாளியாக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் மருத்துவக்கலூரி கட்ட ரூ.400 கோடி நிதி ஒதுக்கியது திமுக தான். எம்.ஏல்.ஏக்களை கைது செய்தது திமுக மீது அதிமுகவிற்கு இருக்கும் பயத்தை காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.