சென்னை: தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா உள்ளதா என்பதை பிசிஆர் டெஸ்ட் மூலமே உறுதிபடுத்திக் கொள்ள முடியும். இந்த கிட் இருந்தால்தான் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகளைச் செய்ய இயலும். இவை போதிய அளவு இல்லாததால் பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் என புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, பிசிஆர் கருவிகளுக்காக சில தினங்கள் முன் தென்கொரியாவிடம் அரசு சார்பில் 10 லட்சம் கிட்கள் ஆர்டர் தரப்பட்டன. இந் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் வகையில் தமிழகத்துக்கு மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5.20 லட்சம் பிசிஆர் கருவிகள் ஏற்கனவே இருப்பில் உள்ளன. இனி வரும் நாட்களில் மேலும் 6 லட்சம் பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வரும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிட்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்குச் சொந்தமான பண்டகச் சாலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. தேவைகளின் அளவை பொறுத்து மருத்துவமனைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.