மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ. 600ம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வியிட கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை சுற்றுலா பயணிகள் செலுத்தினால் மட்டுமே, பாறையை அவர்களால் பார்வையிட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடற்கரை கோவிலை பார்வையிடுவதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடி – சீன அதிபர் இடையேயான சந்திப்புக்கு பின்னர் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் வெண்ணெய் உருண்டை பாறைக்கும் இக்கட்டணம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.