சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநளையொட்டி இன்று முதல் தமிழ் வார விழா ஆரம்பமாகி உள்ளது. இந்த நிலையில், இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி அவர் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, இன்று முதல் மே 5 வரை தமிழக அரசின் சார்பில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
“ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்”! பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு….