மேஷம்

வருமானத்தைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லைங்க. செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட சான்ஸ்கள் ஏற்படும். அப்பாவோட உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை இருக்காது. அரசாங்கக் காரியங்கள் தாமதித்து முடியும். வழக்குகளில் நிதானம் தேவை. சகோதரர்களால் சில நன்மைகள் ஏற்படும். வேலைக்கு விண்ணப்பிச்சு இருந்தவங்களுக்கு வேலை கெடைக்குங்க. ஏற்கெனவே வேலையில் இருக்கறவங்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கெடைக்குங்க. பிசினஸ்ல லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையைப் புதிய இடத்துக்கு மாற்ற நெனைக்கறவங்க அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். பெண்களுக்கு மனசுல அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். புகுந்தவீட்டு உறவுக்காரங்களோட ஏற்பட்டிருந்த கசப்பு உணர்வுகள் நீங்கி உறவு சுமுகமாகும்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் மாதம் 23 ம் தேதி முதல் 26 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

ஃபேமிலில அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பழைய கடன்கள் தீருவதற்கு சான்ஸ் உண்டு. நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த ரிலேடிவ்களைச் சந்தித்து மகிழும் சான்ஸ் உண்டாகும். ஆபீஸ்ல பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சான்ஸ் உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையா இருப்பார்கள். சிலருக்கு ஆபீஸ்ல மாற்றம் ஏற்படக்கூடும். பிசினஸ்ல முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும். மற்றபடி பிசினஸ் வழக்கம்போலவே நடைபெறும். பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். செலவுகள் குறைவாக இருப்பதால் சிறிது சேமிக்கக்கூடிய சான்ஸ் ஏற்படும்.

மிதுனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட சான்ஸ்களும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அத்தியாவசியமான பயணம் மேற்கொள்ள நேரிடும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கெடைக்குங்க. அப்பாவோட உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தைவழி ரிலேடிவ்ஸ்ஸால  சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கெடைக்குங்க. அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் பர்சனல் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.  வியாபார விஷயமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவாங்க. சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். பெண்களுக்கு ரிலேடிவ்ஸ் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கும், பிள்ளைங்களால் உதவி உண்டு. கணவரிடம் எதிர்பார்த்த பண உதவி கெடைக்குங்க.

கடகம்

பணவரவு இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகச் சின்னஞ்சிறு வாக்குவாதம் ஏற்படக்கூடும். பொறுமையுடன் இருக்கறது ரொம்பவே நல்லது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் சான்ஸ் உண்டு. ஆபீஸ்ல கடுமையா உழைச்சு நல்ல பெயர் வாங்குவீங்க. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறு சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பிசினஸ்ல கடினமாக உழைச்சால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னைகள் சிறிய அளவுல ஏற்படும். ஈஸியா சமாளிச்சுடுவீங்க. சக வியாபாரிங்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். பெண்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியான வாரம். புகுந்தவீட்டு ரிலேடிவ்ஸ்கூட இணக்கமான சூழ்நிலையே காணப்படும். தோழிகள் மூலம் ஆதாயம் கெடைக்குங்க.

சிம்மம்

வருமானம் திருப்தி தரும். ஓரளவு சேமிக்கவும் முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் சான்ஸ் உள்ளது. ஆபீஸ்ல வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கெடைக்குங்க. என்றாலும் அதனால் நன்மையே நடக்கும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பிசினஸ்ல விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர் களின் ஒத்துழைப்பு கெடைக்குங்க. பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்குத் தேவையான கடனுதவி கெடைக்குங்க. பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிடும். கணவர்வழி ரிலேடிவ்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

கன்னி

பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லைங்க. என்றாலும், உடல் ஆரோக்கியத்துல கவனம் தேவைப்படுகிறது. அநாவசிய செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அப்பாவோட உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு தந்தை வழியில் எதிர்பாராத பணவரவுக்கு சான்ஸ் உண்டு. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கெடைக்குங்க. மேலதிகாரிங்களை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிசினஸ்ல லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகத்துடன் ஈடுபடுவாங்க. பெண்களுக்குப் பொறுப்புகள் கூடும். கணவரின் அன்பு ஆறுதலாக இருக்கும். சகோதரர்களிடம் கேட்ட பண உதவி சற்று தாமதமாகக் கெடைக்குங்க.

துலாம்

பணவரவுக்குக் குறைவிருக்காது. ஆனால், வாரத் தொடக்கத்தில் மனசுல தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாது. மூத்த சகோதர வகையில் சில சின்னஞ்சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அனுசரித்துச் செல்லவும். டாடி கிட்டேயிருந்து எதிர்பார்த்த உதவி கெடைக்குங்க. அவருடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பழைய கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கெடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீங்க. பிசினஸ்ல எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கெடைக்குங்க. பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வாங்க. சக வியாபாரிகள் ஒங்களோட ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவாங்க. பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனசுல சோர்வு உண்டாகும். வாரப் பிற்பகுதியில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீங்க. பிள்ளைகள் மூலம் சுபச்செய்தி ஒன்று கெடைக்குங்க..

விருச்சிகம்

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனசுல லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். பிள்ளைகள் மூலம் பணவரவு உண்டு. சிலருக்கு தந்தைவழி ரிலேடிவ்களால் சில பிரச் னைகள் ஏற்படும். பொறுமையுடன் இருப்பது நல்லது. வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கெடைக்குங்க.வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சலுகைகளும் கெடைக்குங்க.பிசினஸ்ல எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்கவும் வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கெடைக்குங்க. பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். வீட்டுல சிறிய அளவில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்கான சான்ஸ் உள்ளது.

தனுசு

ஃபேமிலில நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்துல கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே கடுகு சைஸ் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இளைய சகோதரர்களிடம் கேட்ட உதவி கெடைக்குங்க. ஃப்ரெண்ட்ஸ் சந்திப்பு மகிழ்ச்ச யுடன் ஆதாயமும் தருவதா இருக்கும். ஆபீஸ்ல ஒங்களோட திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிங்களோட பாராட்டும் கெடைக்குங்க. பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கறதுக்கான சான்ஸ் உண்டாகும். பிசினஸ்ல எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கெடைக்கும். போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெண்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியான வாரம். பிறந்தவீட்டு ரிலேடிவ்ஸ் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான சான்ஸ் உள்ளது.

மகரம்

பணவரவு தேவையான அளவுக்கு இருந்தாலும், திடீர் செலவுகளால் கடன் வாங்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண் அல்லது பிள்ளையின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மற்ற வர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். ஆபீஸ்ல ஒங்களோட மீதான நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கு மாறும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வாங்க. பல வகைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்காகக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளின் யோசனை களைப் பொருட்படுத்தவேண்டாம். பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புகுந்தவீட்டு ரிலேடிவ்ஸ் ஆதரவாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி முதல் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கும்பம்

வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பேச்சினால் ஏற்பட்டிருந்த மனத்தாபங்கள் ஸ்லோவா மறையும். மகன் அல்லது மகள்கூட இருந்த சண்டை சரியாகும். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளிச்சுடுவீங்க. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ஆபீஸ்ல உற்சாகமாகச் செயல்படுவீங்க. எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கெடைக்குங்க. அதிகாரிங்க சில நேரங்களில் கண்டிப்பு காட்டினாலும், ஆதரவாகவும் இருப்பார்கள். பிசினஸ்ல எதிர்பார்த்த லாபம் கெடைக்குங்க. பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்லா இருக்கும். புதிதாக பிசினஸ் தொடங்க நெனைக்கறவங்க அதுக்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி இருக்கும். வாரப் பிற்பகுதியில் கணவரிடம் எதிர்பார்த்த பணம் கெடைக்குங்க..

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் மாதம் 19 ம் தேதி முதல் 21 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மீனம்

இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசரப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். பிள்ளைங்க பிடிவாதம் பிடிச்சாலும் சரியாயிடுவாங்க. அவங்ககளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சான்ஸ் உண்டு. வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவங்களுக்கு வேலை கெடைக்குங்க. பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு திடீர்ப்பதவி உயர்வு கெடைக்கக்கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் சான்ஸ் உண்டாகும். பிசினஸ்ல சில மாற்றங்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை எதுவும் இருக்காது.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி முதல் 23 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.