வார ராசிபலன்: 25.1.2019 முதல்  31.1..2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

கடந்த இரண்டு மாசங்களாய் அனுபவிச்சுக்கிட்டு வந்த பிரச்சினைகள் எல்லாம் காணாமல் போய் நிம்மதி நிலவுமே? ரைட்டா? எனினும் எல்லார்கிட்டயும் அன்பாவும் இதமாவும் பேசுங்க. குறிப்பா… ஹஸ்பெண்ட் / ஒய்ஃ கிட்ட அனல் கக்க அனுமதி ’நோ ’. குடும்பத்தில் யாரேனும் வெளிநாடு செல்வார்கள். ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். இது வரை தள்ளிப் போய்க் கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும். அதன் காரணமாகக் குடும்பத்தில் சுபிட்சமான சங்கதிகள் உண்டு. மனசில் இருந்த அழுக்கு எண்ணங்களைத் துவைத்துப் பளிச்சென்று காய வைப்பதால் உங்களுக்கே ஒரு நிறைவு வரும். இனி பணத்  துக்குப் பிரச்சினை இல்லை என்று கண்ணாடியைப் பார்த்துச் சிரித்தபடி சொல்லிக்கறீங்கதானே?

சந்திராஷ்டமம் : ஜனவரி 29 முதல் ஜனவரி 31 வரை

ரிஷபம்

குழந்தைகளுக்கு மங்களகரமான விஷயங்கள் நிறைவேறும். படிப்பில் வெற்றிபெற்றுப் பரிசுகளுதம் பதக்கங்களும் வாங்கி, தாங்களும் பெருமைப்பட்டு உங்களையும் பெருமைப் படுத்துவாங்க. அப்படியெல்லாம் நிகழும்போது அவங்களை வாயாரப் பாராட்டப் பழகுங்கப்பா. நீங்க பாட்டுக்கு ரகசியமாய் சந்தோஷப்பட்டால் யாருக்கு என்ன லாபம்? அவங்க தன்னம்பிக்கை அதிகமாயிக்கிட்டே இருக்கு. அதைத் தூண்டிவிடுங்க. என்னது? குழந்தைங்க டென்ஷன் பண்றாங்கன்னா சொன்னீங்க? வாட்!! அவங்க உங்களையா நீங்க அவங்களையா? புதிய வீடு அல்லது வாகனங்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு அலுவலகத்தில் முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கட்டாயம் அவருக்கு உண்டு.

மிதுனம்

எதுக்குங்க  வேண்டாத விஷயங்களுக்கெல்லாம்  மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க? கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக் குங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப்படாதீங்க. கொஞ்சம் ஸ்லோமோஷன்ல தாங்க வாழ்க்கை நகரும். உடனே கன்னத்தில் கைவைச்சு உம்முன்னு உட்காராதீங்க. மிக சீக்கிரத்தில்.. மிக மிக சீக்கிரத்தில் எல்லா பிரச்சினைங்களும் ஒரு ஃபுல்ஸ்டாப் வைக்கப் போறாரு கடவுள். அப்போ சந்தோஷத்தில் குதிக்கப் போறீங்க. அதை நினைச்சு இப்பவே சந்தோஷமா இருங்க. சுபமான செலவுகள் ஏற்படும்.திருமணம் போன்ற சுப காரியங்களுக் காக செலவழிப்பீர்கள். அதனால் நன்மையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

கடகம்

மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆனால் அவை தீமை செய்யாது.  இன்னும் கேட்டால் தலைக்கு வந்தது கிரீடத்தோடு போகும். தொட்டதெல்லாம் வெற்றியாகவும் லாபமாகவும் கலைத்துறையினருக்கு லாப மழைதான் போங்க. அதிலும் எக்ஸ்பிரஸ் வேக திடீர்  லாபம்தான். என்ன நான் சொன்னது  கரெக்ட்தானே? குடும்பத்தில் சின்ன சின்ன மின்னல் கள் தோன்றுவது இயற்கைதான்! எல்லாம் தற்காலிகம்தான் சகோ! நல்ல காலம் பொறக் குது நல்ல காலம் பொறக்குது. எங்கும் எதிலும் காத்துக்கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. இப்போதைக்கு உங்களுக்கு என்ன தெரியுமா  தேவை? பொறுமை. பொறுமையன்றி வேறில்லை. முயற்சிகள் கரெக்டாய்ப் போயிக்கிட்டிருக்கு. நல்லவங்க உங்களை கவனிச்சுக்கிட்டிருக்காங்க. உதவத் தீர்மானிச்சுட்டாங்க.  நம்புங்க.

சிம்மம்

முன்னோர் வழியில் ஏதாவது சொத்து வரும்  சார்/ மேடம். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டத்தான் போறீங்க பாருங்க, ஹப்பாடீ.. ஒரு வழியா தன்னம்பிக்கை வந்துச்சே.. அதுக்கே உங்களைப்  பாராட்டணும். ஆனால் பாவம் உங்களைக் குற்றம் சொல்ல முடியாது. கடந்து வந்த கரடு முரடான பாதை அப்படிச் செய்ய வைச்சுடுச்சு உங்களை. வாழ்க்கையில் எல்லாத்துலயும் வெரைட்டி பார்க்கணும்தான் டியர். அதுக்காக விதம் விதமாய் செலவு செய்து பார்க்கறேன்னா எப்படி! அதை மட்டும் இழுத்துப்பிடிங்க. சீக்கிரத்தில் நியாயமான.. நல்ல  செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.

கன்னி

வங்கிக் கணக்கில் விரிவாக்கம்! சம்பளம் உயரும்.. மற்றும் லாபம் அதிகரிக்கும்.. மேலும்  வெளிநாட்டிலிருந்து டாலர் வரப்போகுது.  மம்மி பற்றி பயம் வேண்டாம். அஸ்திவாரமற்ற பயம் அது. குழந்தைகள் ஏற்படுத்தி வந்த டென்ஷன் படிப்படியாகக் குறைவதைக் கண் கூடாகப் பார்ததாலும் பூஜ்ஜியம் அளவை எட்ட வேண்டும் என்ற இன்றைக்கே அடம்பிடித் தால் எப்படி? எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திருங்க. அக்கப்போருக்கு டெலிட் கமெண்ட் கொடுத்துடுங்க. பொதுவாவே பள்ளி, கல்லூரி, அலுவலகம், பஸ், ரயில் எங்கும் யாரிடமும் வம்பு வேண்டாம். யாரைப் பற்றியும் யாரிடமும் கமென்ட் வேண்டாம். குறிப்பாக யாராச்சு உங்க கோபத்தைக் கிளறிப்பார்த்தால் அதில் உள்நோக்கம் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க. ரியாக்ட் செய்யவே செய்யாதீங்க.

துலாம்

அண்ணன் தம்பி வீட்டு பார்ட்டிங்களுக்கும் உறவினர் வீட்டு விசேஷங்கள் அல்லது கல்யா ணங்களுக்குப்  போனால் போனோமா சாப்பிட்டோ மா பீடா போட்டோ மான்னு வரப் பாருங்க. பேசும்போது இதமாய் இரண்டு வார்த்தைகளையும் பதமாய் இரண்டு வார்த்தை களையும் கலந்து பேசுங்க. அலுவலகத்தில் கொஞ்சம் அதிக வேலைச்சுமை இருக்கும். ஆனாலும் அதையும் ரசிக்கும்படியான ஜாலி மூடில் இருப்பீங்க. அப்பா கிட்டேயிருந்து ஏதோ சந்தோஷமான விஷயம் கிடைக்கப்போகுதுங்க.  சிலருக்குத் தந்தை வழி சொத்துக் கள் கிடைக்கும்.  வெளி நாட்டிர்ல வேலை  தேடிக்கிட்டிருந்தீங்களா? எந்த நிமிடமும் அழைப்பு வரலாம். புதுசா நாலு செட் டிரஸ் வாங்கி ரெடியாயிருங்க.. பெட்டியைத் தயார் நிலையில் வெச்சுக்குங்க.    

விருச்சிகம்

திரையரங்கம் அது இதுன்னு ஜாலியாய்ப் பொழுது போகும். காதல் என்னும் வலையில் மாட்டாத திமிங்கலமாய் இத்தனை காலம் இருந்தீங்க. இனி…அதையும் பார்ப்போமே! நீங்க எப்பவுமே புத்திசாலித்தனமான காரியங்கள் செய்து மற்றவங்க கிட்டேயிருந்து ”சபாஷ்” வாங்கறவங்கதான். …ஆனாலும் யானையின் கால் சேற்றில் மாட்டினால் அதை ஒரு முறை காகமும் கொத்திப் பார்க்கும்னு சொல்லுவாங்களே… அந்தக் கதையா நீங்க லேசா சறுக்கினால்கூட கலாய்க்க ஆளுங்க ரெடியா இருக்காங்க. கவனம் தேவை.. அரசாங்கத் துகிட்டேயிருந்து ஏதோ எதிர்பார்த்துக்கிட்டே இருந்தீங்களே…அது கிடைக்கும். வள்ளல் நீங்கதான்னு ஊர் மெச்சும். விட்டால் கவச குண்டலத்தையெல்லாம் தூக்கிக் கொடுத்துடுவீங்க.

தனுசு

கோயில் குளத்திற்கு ஒரு பக்கம், லிப்ஸ்டிக் பான் கேக் ஒரு பக்கம்னு கார்டு இரண்டு பக்கமும் தேயும். வெளிநாட்டு வேலைக்கு வலைதளத்தில் வலைவீசிக் கொண்டிருந்தவர் களுக்குப் பொன்னான வாய்ப்பு சிக்கும். பெற்றோரின் அரவணைப்பு நெகிழச் செய்யும். குடும்பத்தைவிட்டுப் பிரியும்போதுதானே அருமை அதிகமாகுது! நல்லதுதான். ஏழைச் சிறுவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீங்கள். அது உணவாகவும் இருக்கலாம். வேறு எந்த வகை உதவியாகவும் இருக்கலாம். உடையாகவும் இருக்கலாம்… ஏன்  பள்ளிக்கூடக் கட்டணமாகவும்கூட இருக்கலாம். லோன் என்ற விஷயத்தின் பக்கம் தற்போதைக்குத் தலை வைத்துக்கூடப் படுக்க வேண்டாம். உரிய நேரம் வரும். அப்போது கலக்குங்க.

மகரம்

மம்மியின் சமயேசிதம் உங்களைக் காப்பாற்றிக் கரையேற்றும். திடீரென்று துறையை மாற்ற இது உகந்த சமயம் இல்லை. கொஞ்சம் காத்திருங்க. டாடியும் மம்மியும் உங்களை முழுவதுமாகப் புரிஞ்சுப்பாங்க. கொஞ்சம் அதிக ஓய்வு கிடைக்கும் இந்த வாரத்தில் சின்ன சின்ன கிஃப்ட்கள் நிறையக் கிடைக்கும். அதென்னங்க சில சமயங்களில் அப்படி வார்த்தை களை ரிலீஸ் பண்ணிடறீங்க? மறந்துடாதீங்க. இப்பதான் கொஞ்சம்  கொஞ்சமாய்ப் பிரச்சனைகளிலேயிருந்து வெளியே வந்துகிட்டிருக்கீங்க. மறுபடியும் போய் நூல் கண்டு சிக்கலுக்குள் மாட்டிக்க வேண்டாம். பணத்தால் லாபம் ஒருபக்கம் இருக்கும். மறுபக்கம் பாசத்தால்! விலகிப்போன சுற்றமும் நட்பும் விரும்பி வரும். நீங்க பிறவியிலேயே புத்திசாலி. யாரை எப்படி டீல் செய்யறதுன்னு உங்களுக்கு கோச்சிங் கிளாஸ் எடுக்க வேண்டாம்.

கும்பம்

காத்திருந்து காத்திருந்து பொறுமை இழக்கும் நிலையில் இருந்த உங்களை மிஸ் அதிருஷ்ட தேவி அரவணைத்துக் கொள்வாள்.  அதாவதுங்க.. அதிருஷ்டம் வாசல் கதவைத் தட்டவோ கூரையைப் பிய்க்கவோ நேரமின்றிக் கணிணி வழியே வரும். அலுவலக டென்ஷன்களை மதிக்காதீங்க. அது பாட்டுக்கு ஓடிவிடும். வாகனத்தால் செலவுகள் உண்டு. தயார் நிலையில் இருங்க.  சிறிய அளவில் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். பிரச்சினையை நிரந்தரம் என்று கற்பனை செய்து பேஸ்த்தடிக்காதீங்க. மனைவிக்கும் உங்களுக்கும் உலக மகாயுத்தம் ஏற்பட்டால் அதற்கு நிச்சயமாய் 150 சதவீதம் நீங்கதான் காரணமாய் இருப்பீங்க. கடுகளவும் சந்தேகமே வேணாம். ”இவர்கள் என் குழந்தைகள்” என்று பெருமைப் படும்படி அவன் (அவள்) உங்கள் தலையை நிமிரச் செய்வான்/ள்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 25 முதல் ஜனவரி 27 வரை

மீனம்

கடுகளவு அதிருஷ்டத்திற்காகக் காத்திருந்த உங்களுக்கு அது கால்பந்து அளவு கிடைக்கும். உதைத்துவிடாதீங்க! காதல் திருமணம் கனவிலும் எதிர்பாராத வகையில் கைகூடும். வங்கிக் கடனுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கும். மேளம், தாலி, சத்திரம், விருந்து, தொட் டில், கிலுகிலுப்பை, ரப்பர் ஷீட், ஃபீடிங் பாட்டில் எல்லாம் அடுத்தடுத்து வந்தாச்சு. தயாரா? பல வழிகளில் லாபம் வந்துகிட்டிருக்குமே. அள்ளிப்போடுங்க. சின்ன சின்னதாய் கேளிக்கைகள் மனசை மகிழ்வித்துச் சூழலைச் சிறப்பாக்கும்.  உங்களின்  சம்பளம்.. அது வரைபடத்தில் உள்ள அம்பு மேல் நோக்கி வளரும். யாருக்காவது மருத்துவ உதவி செய்வீங்க.ஏழைங்களுக்கு மருந்து அல்லது ரத்ததானம் போன்ற வகைகளில் செய்வீங்க. சூப்பர்.  செய்ங்க உங்களை வாழ்த்துவாங்க.  

சந்திராஷ்டமம் : ஜனவரி 27 முதல் ஜனவரி 29 வரை

More articles

Latest article