வார ராசிபலன்: 02.08.2019 முதல் 08.08.2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்  

எதிர்ப்புகள் அடங்கும். எதிரிங்க காணாமல் போயிடுவாங்க. வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். எனவே அடக்கி வாசிப்பீங்க. நல்ல பலன் இருக்கும். பாருங்க. உங்களுக்கு ஏற்படுத் தடைகளையெல்லாம்  கடந்து சாதிக்கப்போறீங்க. எதிலும் ஜெயிக்கும் வல்லமை உண்டாகும். உங்களுடைய பலவீனங்களையெல்லாம் கண்டுபிடிச்சு.. லிஸ்ட் போட்டு அதை சரி செய்துக் கொள்ளும் திடீர் விழிப்புணர்வு ஏற்படும். நிறையப் பயணங்கள். வகை வகையான வருமானங்கள். வீட்டில் மகிழ்ச்சி. குழந்தைகளின் கோ ஆபரேஷன். வேறு என்னங்க வேணும்? எனினும் செலவுக் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்கறது நல்லதுதாங்க மேடம். என்னமோ ஆரோக்யத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தீங்களே…இப்போ நிம்மதியாயிடுச்சா? டோன்ட் ஒர்ரி.

ரிஷபம்

நண்பர்கள் உறவினர்வீட்டு திருமண ரிசப்ஷனில் விருந்து சாப்பிடுவீங்க.  உங்க வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் புருஷனின் சினேகிதர்கள் அவருக்கு உதவியா இருப்பாங்க. அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். சவால்களை சமாளிக்கும் திறமை தன்னிச்சையாய் உங்களுக்குக் கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குறிப்பாகக் கடன்களை நல்லாவே சமாளிப்பிங்க. வாங்கிய கடன்களை முறையாய்த்  திருப்புவீங்க. கொடுத்த கடன்களை ஒழுங்காய் வசூல் செய்துடுவீங்க. புது அலுவலகத்திற்கு மாற ஆசைப்பட்டீங்க…மாறிட்டீங்க. ஒரு மடங்கு நன்மையை எதிர்பார்த்து வலது காலை வெச்சு உள்ளே வந்தீங்க. பல மடங்கு நன்மையை அனுபவிப்பீங்க. ஆரோக்யத்தில் அதிக அக்கறை காட்டுங்கள்., விஷப் பூச்சிக் கடி அல்லது தாவர அலர்ஜி பற்றிக் கவனமாக இருங்க.

மிதுனம்

உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டப்பாடா இருங்க.. துரித உணவுகள், கையேந்தி பவன் உணவு… கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள் வேண்டாமே ப்ளீஸ். தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மேக் அப் பொருட்கள், காஸ்ட்யூம் காஸ்மெடிக்ஸ்..அட அதாங்க அந்த அழகு சாதனங்கள் அலங்காரப்பொருட்கள் சம்பந்தமான தொழிலில் (கம்பெனியில்) இருந்தால் உங்களுக்கு இது அறுவடைக்காலம். சுற்றியிருப்பவர்கள் உங்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். எல்லாம் கற்பனை பயங்கள்தான். தூக்கி டஸ்ட் பின்-னில் போடுங்க. கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். டோன்ட் ஒர்ரி. அவங்களால் என்ன செய்துவிட முடியும்?

கடகம்

வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். பல வேலைகளையும் நீங்களே இழத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். விலை உயர்ந்த நகை மற்றும் குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீங்க. பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும். அது எதிர்பாலினத் தினரால் ஏற்படும். சமூகத்திலோ.. அலுவலகத்திலோ, கடந்த சில நாட்களாக இழந்திருந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். .-குறிப்பாய், சகோதர சகோதரிகள் சேருவீர்கள். இத்தனைக் காலம் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். குடும்பத்தில் யாரோ ஒருவருக்குக் குழந்தை பாக்யம் கிடைக்கும். அது உங்களுக்கும் இருக்கக்கூடும்.

சிம்மம்

குடுமபத்துக்குள் ஏற்படக்கூடிய எதுவாக இருந்தாலும், உட்காரந்து மனசு விட்டு பேசி முடிவுகள் எடுத்து விடுங்க. யாரையும் இடையில் நுழைய விடாதீங்க. இரண்டு பக்கம் செலவு செய்தால் மூன்று பக்கம் சம்பாதிப்பீங்கம்மா.   இந்த வாரம் சந்திக்கும் நபர் ஒருத்தர் (அது ஆணானாலும் சரி.. பெண்ண்ணானாலும் சரி) பிற்காலத்தில் உங்களுக்கு நிறைய நன்மை  செய்யப்போறாங்களே! சின்னச் சின்னத் தடை தாமதங்களை ஒரு பொருட்டாய் நினைச்சு முயற்சியைக் கைவிட்டுடாதீங்க ப்ளீஸ். மேலதிகாரிகள் தலைக்கு மேல் ஒரு சிம்மாசனம் வெச்சு அதில் உங்களை உட்கார வைப்பாங்க. இதற்குத்தானே ஏங்கினீங்க? ஏதேனும் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல வாய்ப்பு வரும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

கன்னி

ஷேர் மூலம் பணம் வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். பிள்ளைகள் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் நீங்கும். சகோதர சகோதரிகள் வகையில் ஆதரவு பெருகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். குறிப்பாய்,.  பாஸ்போர்ட் அல்லத விசாவுக்கு மனுச் செய்திருந்தீங்கன்னா அது சுலபமாய்க் கிடைக்கும்.  புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள். வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நீங்கள் விரும்பிய இடத்துக்குப்  பயணம் போவீங்க. என்ஜாய்.  

துலாம்

திட்டமிடாத திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அப்புறம் சமாளிக்கவும் செய்வீங்க. கவலைப்படாதீங்க. நினைவில் நிற்கும்படி எதிர்பாராத நல்ல செய்தி ஒண்ணு இருக்கு. வெளிநாடு போக ஏங்கிக்கிட்டிருந்தீங்களே. இப்போ மகிழ்ச்சிதானே?  கணவன் மனைவிக்குள்ள கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டாலும் சமாளிச்சுடுவீங்க. நீங்க மாணவியாம்மா? மாணவராப்பா? அரியர்ஸ்ஸை எல்லாம் வீசிக் கடாசிடுவீங்க. வேலை பார்க்கறீங்களா மேடம்? உங்க பொறுமையும் அனுசரணையும் நல்ல விதத்தில் ஒர்க் அவுட் ஆயிடுச்சு. பேச்சினால் நன்மை விளையும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அல்லது அட் லீஸ்ட் கலந்துக்குவீங்க. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவீங்க.

விருச்சிகம்

ஒரு சுப நிகழ்ச்சி நடக்காதான்னு குடும்பத்தில் ஏங்கிக்கிட்டிருந்தீங்க்ளே. இப்போ நிம்மதியா? சந்தோஷமா? குடும்பத்தில் எல்லோருடைய ஏக்கமும் தீரும். உங்க சாதனைகள் மற்றும் வெற்றிகள் காரணமாகத் தலை யில் பாராம் ஏற்படாமல் பார்த்துக்குங்க. சமநிலையில் நில்லுங்க!  முன்பெல்லாம் நூறு முறை முயன்றால் ஒரு முறை வெற்றி என்ற விகிதாசாரத்தில் சோர்ந்து செயலிழந்திருந்தீங்க இல்லையா? ஆனால் இப்போ எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்று முழங்கப் போறீங்க.  சும்மாவா.. எவ்ளோ முயற்சிகள். எனினும் எதுவும் டக்டக்கென்று நடக்காது. தடைகள் இருக்கும். தாமதங்கள் இருக்கும். அதனால் என்ன? முடிவு நல்லபடியாகத்தானே இருக்கும். உங்களை யாரும் மதிக்கவில்லை, யாருமே புரிந்துக் கொள்ளவில்லை யென்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். எல்லாம் உங்க கற்பனைங்க.

தனுசு

படிப்படிப்படிப்படியாக நன்மைங்க அதிகரிக்கும்.  முயற்சியும் உழைப்பும் இல்லாமல் வெற்றிக் கனி இருக்கும் உச்சியைத் தொட முடியுமா?  அதனாலதான இந்த அளவு உழைக்க வைக்கிறார் இறைவன். நீங்க ஜெயிக்கா மல் யாருங்க ஜெயிக்கப்போறாங்க? கம் ஆன்.  உழைப்பு பற்றிப் புலம்பாதீங்க. தாமதத்தைப் பற்றி வொர்ரி பண்ணிக்காதீங்க. நண்பர்களோடும் சினேகிதிங்களோடும்  செம ஜாலியாய்ப் பொழுது போகும். எதிலும் ஒரு லட்சுமணக்கோடு போட்டு நில்லுங்க. எனில் பிரச்சினையே வராது. உங்க பிளஸ் பாயிண்ட்டே உறுதியான மனசுதானே. அதை எப்பவும் அதே உறுதியோட வெச்சுக்குங்க. டினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எனவே அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

மகரம்

குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை நன்றாய்ப் புரிந்து கொள்ளும்படி சந்தர்ப்பங்கள் அமையும். எனவே விழித்துக்கொள்வீர்கள். புதிய வேலைக்காக ஏங்கிக் காத்திருந்தீங்க. நிறைவேறும். பிரிந்திருந்தவர்களை சேர்க்கவும் சண்டை போட்டவங்க சமாதானமாகவும் உதவுவீங்கம்மா. அந்தப் புண்ணியம் உதவும். நிறையப் பயணம் போறீங்க. நன்மையளிக்கும். கணவன் மனைவிக்குள் ரொம்பவும் மகிழ்ச்சியும் அனுசரணையும் நிலவும். அக்கம் பக்கத்தினர் நிறைய உதவி செய்வாங்க.     தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்குவீர்கள்.

கும்பம்

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். என்றாலும் பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். அதைவிட உழைப்பை அதிகரிக்கலாம். முனைப்பைக் கூடுதலாக்கலாம். வியாபாரிகளா நீங்கள்? எனில் கடன் வாங்கி கடையை விரிவுப்படுத்துவீர்கள், வியாபாரஸ்தலத்தையோ, வீட்டையோ நீங்க நவீனமாக்குவீர்கள். உணவு, இரும்பு, கண்சல்டன்சி, ரியல் எஸ்டேட், மர வகைகள் போன்ற பிசினஸ்களில் ஈடுபட்டிருக்கீங்களா? அப்படியானால் ஷ்யூராய் ஆதாயம் உண்டு. உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நம்பகமானவங்கதானா? தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பாக்கிகளை இன்முகத்துடன் பேசி வசூலிக்கப்பாருங்கள்.

மீனம்

புது வீடு அல்லது ஃப்ளாட் கட்ட/ வாங்க பத்திரம் பதிய நேரம் வந்தாச்சு…நல்ல யோகம் வந்தாச்சு. தவிர கூடுதலாய்ப் பல நன்மைகள் வீட்டு வாசலில் க்யூ போட்டு நிற்கும். எதிர்பார்க்காத அளவு எதிர்பார்க்காத தொகை ஒன்று வரப்போகுது தெரியுமா? ஆஃபீஸில் சற்று அதிக உழைப்பை இன்புட் செய்ய வேண்டியிருக்கும். அதனால் என்ன? ஒன்றாம் தேதி அவுட்புட் அமோக விளைச்சல்! நீங்கள் உத்யோகம் பார்ப்பவரா? எனில் அலுவலகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிலைமை சீக்கிரம் சரியாகும்.

More articles

Latest article