மேஷம்

ஏற்ற இறக்கங்களுடன் செல்லும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனையும், ஆதரவும் கிடைக்குமுங்க. முன் பின் தெரியாதவர்களின் கவனமாக பழகவும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். கணவன் மனைவி இடையே மன சஞ்சலம் ஏற்படக் கூடும்.பொருள், பண வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தளவு சிக்கனமாக இருப்பது நல்லதுங்க. உங்கள் பிரச்னையை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். அதே போல் அடுத்தவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உங்களால் முடியும் என்ற விஷயங்களில் மட்டும் வாக்கு கொடுக்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்க கூடும். வண்டி வாகன பாக்கியம் உண்டாகுங்க. குட்லக்.

ரிஷபம்

சில சவால்கள் நிறைந்த செயல்களை செய்ய வேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியை செவ்வனே செய்து முடிப்பீங்க. பதவி, ஊதிய உயர்வு கிடைக்கக் கூடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களு டனான மனஸ்தாபம் நீங்கும். திடீர் பயணங்கள் செய்ய வேண்டி வரும். அப்போது உறவினர், நண்பர்களின் உதவி கிடைக்குமுங்க. சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்குமுங்க. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன் தீர்ப்பதற்கும், சேமிப்பு அதிகரிக்கவும் எண்ணங்கள் தோன்றும். விட்டிற்கு தேவையான புது பொருளை வாங்குவீங்க. ஆல் த பெஸ்ட்.

மிதுனம்

சகோதர, சகோதரிகளின் ஆதரவும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கக் கூடிய மாதமாக இருக்கும். சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களின் செயல் கோபத்தை ஏற்படுத்துவதாக அமையும். இந்த நேரங்களில் பொறுமையும், கோபத்தை தவிர்ப்பது நல்லதுங்க.எதிர்பாராத செலவுகள் வரக் கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது ஆலோசித்து எடுப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சற்றூ கவனம் தேவை.வழக்கில் இழுபறி நீடிக்கலாம். பகைவர் களின் தொல்லை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை ஏற்படலாம். தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். பெஸ்ட் ஆஃப் லக்ஸ்.

கடகம்

உற்சாகமும் நிரம்பி இருக்கக் கூடிய வாரம். கணவன் மனைவி இடையேயான மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். நண்பர்களும், உறவினர்களும் பல விதங்களில் பக்கபலமாக இருப்பாங்க. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். செமிப்பு அதிகரிக்க முயற்சி செய்யவும். பணம் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் மீதான வீண் பழிச்சொல் நீங்கும். உங்கள் மீதான மதிப்பு மரியாதை உண்டாகுங்க. வீடு சார்ந்த செலவுகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் உங்களுக்கு ஆதரவும், உதவியும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வீங்க. பணம், விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. இட்ஸ் ஓகே.

சிம்மம்

மனதில் புதுவித தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். நெருங்கியவர்கள், உறவினர்களுடன் பேசும் போது கவனமாக இருப்பது அவசியம். உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்து பொறுமையை கையாள்வது அவசியம். திடீர் பயணங்கள் உண்டாகலாம். அதனால் நல்ல ஆதாயம் ஏற்படக் கூடும். நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் சிறு பண செலவு ஏற்படலாம். எந்த ஒரு வேலை அல்லது வாய்ப்புக் கிடைப்பின் அதில் முழு தைரியம், துணிவுடன் இறங்கினால் வெற்றி கிடைக்கக் கூடும். வேலைகளில் ஏற்படும் தடங்கல், பிரச்சினைகளில் உங்கள் சாமர்த்தியத்தால் சரி செய்வீங்க. தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்க்கவும். பண வரவும், கடன் வசூல் ஆகும். மன வருத்தம் நீங்குவதற்கான வழிகள் பிறக்கும். வெகு காலம் எதிர்பார்த்த நற்செய்தி வரும் நாள் அதிக தூரத்தில் இல்லைங்க. ரியலி.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை

கன்னி

குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் நீங்கக் கூடும். எதிர்கள் கூட நண்பர்களாக மாற வாய்ப்பு உண்டு. ஆனால் உறவினர்களுடன் சற்று கவனமாக இருப்பது நல்லதுங்க. அவர்களுடன் பேச்சிலும், செயலிலும் பொறுமையை கையாளவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். முக்கிய முடிவுகளை எடுக்கு போது நன்றாக ஆலோசனை செய்வது அவசியம். வாகன பயன்பாட்டின் போது கூடுதல் கவனம் தேவை. நாம் உண்டு நம் வேலை உண்டு என இருப்பது நல்லதுங்க. அடுத்தவரின் பிரச்சினையில் மூக்கை நுழைக்காதீர்கள். இக்கட்டான சூழலை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் பணிச்சுகையும், கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொழிலில் போட்டிகள் நிலவும். உங்கள் பேச்சால் பல சிக்கலான விஷயங்களை சாதகமாக்குவீங்க, சூப்பர்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 12 வரை

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கும். கணவன் – மனைவி இடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். இந்த வாரம் உற்றார் உறவினர். நண்பர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பாங்க. குல தெய்வ வழிபாடு தவறாமல் செய்து வர உங்கள் திட்டங்கள், எண்ணங்கள் நிறைவேறும். தன வரவு ஓரளவு இருக்கும். அதே சமயம் பண நெருக்கடி குறையும். பணம், பொருள் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லதுங்க. தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கி வெற்றி அடைய வாய்ப்பு உருவாகும். மனம் தளராமல் உங்கள் செயலை செய்து வர வெற்றி வாய்ப்பு தேடி வரும்.தொழிலில் இருந்த போட்டி குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் நீங்கள் விரும்பியபடி சாதகமான பலன் கிடைக்கு முங்க. ஹாப்பி?

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 14 வரை

விருச்சிகம்

முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கவனமாகவும், பொறுமையாகவும் இருப்பது அவசியம். உணர்ச்சி வசப்படக்கூடிய பல சூழல்கள் உருவாகும். அப்போது பொறுமையாக இருந்து, கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் மீதான மதிப்பு மரியாதை உயரக் கூடும். பல நாளாக நீடித்து வந்த கவலைகள் கரைந்தோடும். பெற்றோர் உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கவும். அவர்களுக்கு சிறிது மருத்துவ செலவு ஏற்படலாம். உங்கள் பேச்சு, செயல்பாடு நல்ல மதிப்பு மரியாதையைப் பெற்று தரும். பண வரவு திருப்தி கரமாக இருக்கும். இருக்கும் இருப்பினும் செலவு செய்யும் போது கவனம் தேவை. தம்பதியிடையே நல்ல புரிதல் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் சற்று கடினமாக சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் தீட்டம் வெற்றி அடையும்.. வாவ்.

தனுசு

பல நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியாக்க கடுமையாக முயல்வீங்க. குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மன இறுக்கம் நீங்கும். மற்றவர் களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் உண்டாகுங்க. அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுங்கள். அவர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம். உஷ்ணம் சார்ந்த உடல் பிரச்னைகள் ஏற்படலாம். பண வரவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இர்நுத விஷயங்கள் நடந்து முடியும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களின் செயல்பாடு மற்றவர்களிடமிருந்து மதிப்பு, மரியாதை பெற்றுத் தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பீங்க அதனால் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். ஹப்பாடா. வெரி குட்.

மகரம்

கவனமாக இருந்தால் அனைத்தும் ஜெயத்தை தரும். பூர்விக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு பண வரவு ஏற்படும். பண வருவாயை கூடுமான வரை சேமிக்க முயல்வது நல்லதுங்க. கணவன் மனவி இடையே சலசலப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அதன் மூலமும், வேறு சில காரணங்களால் உடல் நல பிரச்னை ஏற்படலாம்.குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையாக நிதானமாக நடந்து கொள்வது நல்லதுங்க. இதன் மூலம் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். வரவு நன்றாகைருக்கும் இருப்பினும் செலவு கையை மீறி செல்ல வாய்ப்புண்டு கவனம். எதிர்பார்த்த நல்ல நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியை சரியாக முடிக்கக் கூடிய நல்ல சூழல் நிலவும். தொழிலில் எதிரிகள் தொல்லை குறையும். தாங்க் காட்.

கும்பம்

பொறுமையும், கவனமும் இந்த வாரம் உங்களுக்கு அவசியம் தேவைப்படும்.குடும்ப உறுப்பி னர்கள் குறித்த கவலை நீங்கும். உங்கள் துணையுடனான ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். குடும்பத்தில் சல சலப்பு இருந்து கொண்டே இருக்கும். மன அமைதி உண்டாக விட்டுக் கொடுத்துச் செல்வது மிக அவசியம். பண வரவு ஓரளவு இருக்கும். இருப்பினும் கடன் தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சிறாபாக கையாள்வீங்க. தொழில் வழக்கம் போல இருக்கும்.குடும்பம், பணி இடங்களில் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். இருப்பினும் சில் விஷயங்களை வெளிப்படையாக பேசுவதால் குடும்ப ஒற்றுமை கூடும். பயணங்களால் அலைச்சலும், செலவும் ஏற்படக் கூடும். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். டோன்ட் ஒர்ரி. பி கேர்ஃபுல்.

மீனம்

உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய வாரம் இது. நீங்கள் பல நாள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் பொறுமை, விட்டுக்கொடுத்து செல்லாமல் இருந்தால் வீண் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சில விஷயங்களில் வீண் அலைச்சல் ஏற்படக் கூடும். உடன் பிறப்புகளிடம் அக்கறை காட்டவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். துணையின் ஆலோசனை வெற்றியைத் தரும். புதிய சொத்துக்கள் வாங்க ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். தொழில், வியாபாரம் சீராக செல்லும். நண்பர்கள், உறவினர்களுடன் இருந்த மன இறுக்கம் நீங்கும். புதிய நபர்கள், தீடீர் நண்பர்கள், வெளி நபர்களை நம்ப வேண்டாம் சிக்கலைத் தரும். உங்கள் செயலில் புத்தி சாதூர்யம் வெளிப்படும். தட்ஸ் குட்.