மேஷம்

பேச்சில் அட்ராக்ஷன் அதிகமாகுங்க. உஷ்ணம் சம்பந்தமான சின்னச்சின்ன பிராப்ளம்ஸ் இருக்கும். ஆனால் வீக் எண்ட்ல சரியாயிடும். ஹெல்த்தை கண்டிப்பா, கட்டாயமா, நிச்சயமா, ஷ்யூரா நல்லா கவனிச்சுக்குங்க. பிரதர்ஸ் சிஸ்டர்ஸ்கூட சண்டை கிண்டை வேணாம்ப்பா. பேங்க் பேலன்ஸ் நிறைய நிறைய அதிகமாகும். எதிரிபாலினத்தாரால் லாபமும் நன்மையும் இருக்கும். கணவர் அல்லது மனைவிக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். அவங்களுக்கு ஆபீஸ்ல சந்தோஷம் தரும் நியூஸ் வரும். டாடிகூட ஃபைட்டிங் சீன் வேணாங்க. ஸ்கின் பற்றிய சின்னபிரச்னை வந்து சரியாகும். உங்களுக்கு உகந்தவர்களின் மனசு கோணாம நடந்துக்குங்க. ஆபீஸ்ல பேசி ஒரு  நல்ல விஷயம் சாதிப்பீங்க. உங்களுடைய பணத்தேவை பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருந்து வரும் மெயில் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷபம்

அழகுணர்ச்சி அதிகமாகும். சூப்பரா டிரஸ் பண்ணிக்கட்டு சென்ட் அடிச்சு சந்தோஷமா வளைய வருவீங்க. இளைஞர்களுக்கு லவ் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் ஒரு பக்கம் ஃபைட்ஸ் சீன்ஸ் இருந்தாலும் மறுபக்கம் லவ் சீன்ஸூம் இருக்குமுங்க. எதிர்காலம் பற்றிய சஸ்பென்ஸ் இருப்பதால் பய உணர்ச்சி அதிகமாகும். குழந்தைங்களின் எதிர்காலத்துக்கு உதவும் செயல் செய்வீங்க. முகத்தில் பொலிவு கூடும் வசீகரம் அதிகரிக்கும். தொழில் லாபம் அதிகரிக்கும். நீங்க செயல்கள் சிறப்படையும், தொழில் வியாபாரம் விருத்தியாகும். ரிலேட்டிவ்ஸ் மூலம் நல்ல நியூஸ் ஒண்ணு உங்களைத் தேடிக்கிட்டு வரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 30 முதல் மே 2 வரை

மிதுனம்

ஏ….கப்பட்ட செலவு செய்வீங்க. பெரிய அளவில் முக்கியமான எக்ஸ்பென்ஸா இருக்கும்னு சொல்றதுக்கில்லைங்க. வாழ்க்கையை ஜாலியா அனுபவிக்கறதுக்கான செலவுங்களாத்தான் இருக்கும். நல்லாச் செலவு செய்ங்க. யாரு வேண்டாம்னாங்க. பட்… வேஸ்ட் பண்ணாதீங்க. நண்பர்கள் யார் எதிரிங்க யாருன்னு புரிஞ்சுடும்.லோன் சாங்க்ஷன்ஆறதுக்குக் கொஞ்சம் டிலே ஆகக்கூடும். டென்ஷன் ஆகாதீங்க. கடைசில நல்லபடியா கிடைக்கும். வேலையில் கவனம் விழிப்புணர்வு தேவை. ஆன்மீக பயணம் அதிகரிக்கும்.அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.. பெண்களுக்கு உயர்பதவி யோகம் தேடி வரும். மாணவர்களுக்கு பிடித்தமான கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். ரிலேட்டிவ்ஸ், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். கணவருடன் /மனைவியுடன் பிரச்சினை உண்டாகும்

சந்திராஷ்டமம் : மே 2 வரை முதல் மே 4 வரை

கடகம்

நிறைய லாபம்ஸ் வரும். ஒன்றிற்கு மேற்பட்ட வகைகளில் பணம் வரும். வயிறு சம்பந்தப்பட்ட பிராப்ளம்ஸ் வராதபடி கவனமாய்ச் சாப்பிடுங்க. நேரத்தோடு, சுகாதாரமான, வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளும் உணவை மட்டும் சாப்பிடுங்க. கல்வி சம்பந்தமான திடீர் செலவுங்க இருக்கும். சமாளிச்சுடுவீங்கப்பா.. பிகாஸ் திடீர் பணவரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், செயல்கள் எல்லாம் சிறப்படையும் ஆரோக்கியம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் சப்போர்ட் கிடைக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.

சந்திராஷ்டமம் : மே 4 வரை முதல் மே 7 வரை

சிம்மம்

கலைத்துறையில் புது வாய்ப்புக்கள் கிடைக்குங்க. என்றைக்கோ கத்துக்கிட்ட பாட்டு, நடனம் போன்ற விஷயங்கள் இப்போ நல்லபடியாக் கைகொடுக்கும். போட்டோத் தொழில் போன்றவற்றில் உள்ளவங்களுக்கு இது அறுவடைக்காலம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கலைத்துறையினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீங்க. தாங்கள் எடுக்கும் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.  முன்கோபத்தைக் குறையுங்கப்பா. வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீங்க. திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீங்க. புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

கன்னி

ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கும் நீங்க ஃப்ரெண்ட்ஸ்க்கும் உதவி செய்வீங்க. லோன் போட்டிருந்தால் உடனடியா அதுக்கு அனுமதிகிடைக்குங்க. திடீர்னு செம்ம அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வந்து வீட்டு வாசலில் நின்று காலிங்பெல் அடிக்குங்க. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும், ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.விருந்தினர் வருகை உண்டு. கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும். தேவையற்ற மன சஞ்சலம் அகலும்.

துலாம்

ஆரோக்யத்தை நல்..லாப் பார்த்துக்குங்க. குறிப்பா யூரின் சம்பந்தப்பட்ட பிரச்னைங்க வராமல் நிறையத்தண்ணி குடிங்க. நீங்க பெற்ற குழந்தைங்களுக்கும் உங்களைப் பெற்ற மம்மிக்கும் நன்மைகள் நடக்கும். குழந்தைங்க பற்றி நீங்க கொண்டிருந்த பயங்கள் தீரும். புது ஜாப் முயற்சி செய்யலாம். அப்பாவுக்கு பிரமோஷன் கிடைக்கும். உங்க புகழ் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய பேச்சாற்றல் மூலம் அனைத்து சிக்கல்களையும் சமாளிப்பீங்க. பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். புதியதாக வீடு, மனை வாகன சேர்க்கை ஏற்படும். செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவை உத்யோகஸ்தர்கள் பெறுவர்.

விருச்சிகம்

வாகனம் வாங்குவீங்க. ஸ்டூடன்ட்ஸ்க்கு நல்லவையெல்லாம் நடக்கும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். உங்க லவ் வெற்றியடையுங்க. ஆரோக்யத்தில் நிச்சயமா கவனம் செலுத்தணும். குறிப்பா ஸ்கின் சம்பந்தப்பட்ட பிரச்னைங்க வந்தால் உடனே டாக்டர்கிட்ட போயிடுங்க. மம்மிக்கு பிரமோஷன், இன்கிரிமென்ட் எல்லாம் கிடைப்பதால் அவங்க சூப்பர் சந்தோஷ மூடில் இருப்பாங்க. இதுதான் சமயம்னு உங்களுக்கு வேண்டியதையெல்லாம் கேட்டு வாங்கிக்குங்க. தயாள குணம் வெளிப்படும். சுபச்செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வீடு கட்டுவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உங்களின் மனதில் உள்ள நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்‘.வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

தனுசு

எதில் கவனமாய் இருக்கீங்களோ இல்லையோப்பா.. பேச்சில் ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க. அம்மாவுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் இருக்கக்கூடும். அவங்களைப்போட்டு டென்ஷன் செய்யாதீங்க. நண்பர்கள் மிக உயர் நிலையை அடைவாங்க. உங்களைக் கண்டுக்கலைன்னா கவலையே படாதீங்க. கூடிய சீக்கிரம் கூப்பிட்டு விருந்து வைப்பாங்க. வீண் பழி வராதபடி நடந்துக்குங்க. செல்ஃப் கான்பிடன்ஸ் குறையாமல் பார்த்துக்குங்க. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசம் நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்.

மகரம்

பேச்சினால் நன்மை வருமுங்க. கடைசி நிமிஷத்தில் பார்த்துக்கலாம்னு எதையும் தள்ளிப்போடாதீங்க. சோம்பலுக்கு நோ என்ட்ரி குடுங்க. குடும்பத்தில் புது என்ட்ரி இருக்கும். கல்யாணமாகி ஒரு புதுப்பெண் வரலாம் அல்லது டெலிவரி ஆகி ஒரு புது பாப்பா வரக்கூடும். குழந்தைங்க பெரிய அளவில் புகழ் பெறுவாங்க. தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர் பயணங்கள் உண்டாகும், நண்பர்கள் ஆதரவாக இருப்பாங்க. தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். வீண் இடையூறுகள் அகலும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்படும்

கும்பம்

குழந்தைங்களுக்கு நன்மை நடக்கும். சுய நலம் அதிகமாயிடாம  பார்த்துக்குங்க. தன்னம்பிக்கை என்பது கர்வமா கன்வர்ட் ஆயிடக்கூடாதுன்னு கவனமா இருங்க. கணவருக்கு/ மனைவிக்கு ஏதாச்சும் நல்ல விஷயம் நடக்கும். சின்ன பயணம் இருக்கலாம். அவாய்ட் செய்யப் பாருங்க. டாடிக்கு ஒரு ஹெல்ப் செய்து அவருடைய ஆசீர்வாதத்தை வாங்குவீங்க. சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ரிலேட்டிவ்ஸ் வருகை இருக்கும். பெண்களுக்கு மனதெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். மனசுல தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.

மீனம்

மூத்த சகோதரர்ஸ் மற்றும் சகோதரீஸ்க்கு வெளிநாட்டிலிருந்து நன்மைகள் நடக்கும். பேச்சில் உங்க அட்ராக்ஷன் அதிகரிக்கும். நிறைய செலவுங்க வரும். செலவு எல்லாம் நல்ல விஷயங்களைத் தரும். லாபமெல்லாம் நத்தை மேல ஏறி வரும். டென்ஷனாகாதீங்க. விரைவில் நிலைமை மாறும். ராத்திரி பகல் பார்க்காமல்.. சாப்பாடு தூக்கம் பற்றி நினைக்காமல் உழைப்போ உழைப்புன்னு உழைக்க வேண்டி வரும். தன்னம்பிக்கையைக் கைவிட்ற வேண்டாம். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீங்க. எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து நன்மை அடைவீங்க. போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உங்க வாக்குவன்மை அதிகரிக்கும். வெளிநாடு பயணம் போறதுக்கு நீங்க செய்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அனைவரையும் அனுசரித்து செல்வீங்க. எடுத்த காரியம் கைகூடும். கடன் விவகாரங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.