மேஷம்   

குல தெய்வத்துக்குப் பல நாட்களாய்ப் போக நினைத்துத் தட்டிப் போய்க்கொண்டே இருந்த தல்லவா? அது நிறைவேறுமுங்க. தந்தைக்குப் புகழ் கூடும். உங்க தாய்மாமனின் உதவியும், ஆறுதலும், ஆதரவும் கிடைத்தே தீரும். அப்பாவுக்கு திடீர் நன்மை கிடைக்கும். அலுவலகத் தில் வெளிநாடு அனுப்புவாங்க. பணவரவு உண்டு. ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்க. நடக்க இருக்கும் எதையும் எதிர்மறையாகப் பார்க்காமல் சுறுசுறுப்பாய்க் காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். அதே சமயம் எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். பயம் வேண்டாம். கவலைப்பட வேண்டாம். மெல்ல மெல்ல வாழ்க்கையில் விடியல் தென்படும்.வயிறு சம்பந்தப்பட்ட ஆரோக்யத்தில் கவனமாய் இருக்கணுங்க.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 2 முதல் அக்டோபர் 4 வரை

ரிஷபம்

வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரப்போகுதே. ஜாலிதான்.  மனசு உற்சாக மாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்க திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீங்க. புதிய ஆடை, நகைங்க வாங்குவீங்க. அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள்  உங்களுக்குச் சாதகமாக முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீங்க. குடும்பத்துடன் கோயிலுக்கெல்லாம் போய்,  பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் நடந்துவிடும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத் தில்  லாபம் அதிகரிக்கும்

மிதுனம்

நீங்க திருமணமாகாதவரா? எனில் திருமணம் நிச்சயமாகும். அல்லது உங்க குழந்தைகள் திருமண வயசில் இருக்காங்களா? அப்ப அவங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் கட்டாயம் உண்டுங்க. உடன் பிறந்தவங்க வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகிட்டு நெருங்கி சொந்தங்களைச் சந்திப்பீங்க. ஜமாயுங்க. நன்மைகள் சற்று ஆமைவேகத்தில் வரும். செலவுகள் மடமட வென்று ராக்கெட் வேகத்தில் ஓடும். எதுக்கும் பயப்படாதீங்க. தானே சரியாகும். வரவர உங்களுக்குப் பொறுமை குறைஞ்சுக்கிட்டே வருது. குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பாஸ்போர்ட், விசா கிடைக்கும். புது முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. அலுவலகத்தில் நீங்க உண்டு உங்க வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கடகம்

குழந்தைகள் பெயரும், புகழும் பெற்று ஜமாய்க்க ஆரம்பிப்பாங்க. திடீர் லாபங்களும், எதிர்பாராத வருமானமும் கிடைக்கும். பலகாலம் வராத தொகைகள் திடீர்னு வந்து சேரும். நீங்களும் பல காலம் கிடப்பில் போட்டிருந்த கடமைகளைச் செய்து முடிப்பீங்க. வயிறு சம்பந்தமான சின்னச்சின்ன உபாதைகளைச் சமாளிச்சுடுவீங்க. அறுவை சிகிச்சையும் இருக்காது ஒண்ணும் இருக்காது. ஏன் இப்படி பயப்படறீங்க? அரசாங்க உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, ஆனால் அதில் சில தடைகளும் தாமதங்களும் இருக்கும். குரு சன்னிதிகளுக்குச் செல்வீங்க.  கோயில்களுக்குச் செல்ல நீங்க போட்டிருந்த திட்டங்கள் பல தடைகளுக்குப் பிறகு இப்போது நல்ல முறையில் நிறைவேற ஆரம்பிக்கும்.

சிம்மம்

வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் எதிர்பார்த்தமாதிரியே அவங்களுக்குக் குடியுரிமையும் நல்ல உத்யோகமும் கிடைக்கும். வாழ்க்கை சுவாரஸ்யமில்லாமல் போய்க்கொண்டிருந்த சமயத்தில் திடீர் அதிருஷ்டம் உள்ளே நுழைஞ்சு உங்களை சந்தோஷத்துல திக்குமுக்காடச் செய்யும். மந்த கதியில் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை துரித கதியில் போகும். காதலில் ஈடுபாடு வரும். அல்லது உங்க காதல், திருமணத்தில் முடியும். நண்பர்களுக்கு அரசாங்க உதவிகிடைக்கும் அல்லது அரசாங்க உத்யோகமே கிடைக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்க திறமை வெளிப்படும்.  சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீங்க.

கன்னி

கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.நாலு இடங்களுக்குப்போனால் மற்றவர்களைவிட உங்க ளையே பலரும் தேடி வருவாங்க. அதிகம் பேசாதீங்க. குடும்பத்தினர்கள் கிட்டேயும் நெருங்கிய உறவினர்களிடமும் நன்றி அது இது என்று எதையும் எதிர்பார்க்காதீங்க. பலனே எதிர்பார்க்காம இன்றைக்கு செய்துடுங்க. பலன் கட்டாயம் உண்டுங்க. உஷ்ணம் சம்பந்தப் பட்ட உடல் உபாதைகள் வராதபடி கவனமாப் பார்த்துக்குங்க. கணவருக்கு/ மனைவிக்கு அரசாங்க உதவி  அல்லது உத்யோகம் கிடைக்கும். அடி  வயிற்று உபாதைகள் இருக்கும். உடனே சிகிச்சை எடுங்கள். எளிமையான மருந்து மாத்திரையுடன் முடிந்துவிடும். தயவு செய்து எந்தக் காரணம் கொண்டும் யாரிடமும் கடுமையாகப் பேசவோ சாபம் கீபம் விடவோ வேணாங்க.  உங்களுக்கே திருப்பிக்கும்.

துலாம்

இப்போதைக்கு உத்யோகம் மாறும் நினைப்பெல்லாம் வேணாங்க. சற்றே பொறுமையா இருங்க. அப்படி மிகவும் தவிர்க்க முடியாத காரணம் என்றிருந்தால் உங்க ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பியுங்கள். உங்க கவர்ச்சி அம்சமும், புகழும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். எது பற்றியெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்லபடியாக நடந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும். பொதுவாகவே உங்க மனசில் பயமும் குழப்பமும் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை என்றால் கிலோவில் அளக்கணுமா லிட்டரிலா என்பீர்கள். ஆனால் நம்பிக்கையுடன் செய்யும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும்! வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியங்க.

விருச்சிகம்

மந்தமாக/ நிதானமாக/ மெதுவாகக் காரியங்கள் நடைபெற்றாலும் நல்லபடியாகவே நடக்கும். நின்றுவிடாது. பின்வாங்காதீங்க. பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். நண்பர்கள் என்ற பெயரில் யாரையும் உங்க உரிமையில் தலையிட அனுமதிக்கவே அனுமதிக்காதீங்கப்பா. நல்ல நண்பர்கள் வாழ்வில் முன்னேறுவாங்க. சிலரின் முன்னேற் றத்துக்கு நீங்களும் காரணமாய் இருப்பீங்க. திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை இல்லாம ஏங்கிக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்குக் குழந்தை பிறக்கும். காதல் திருமணம் கனிந்து வெற்றியளிக்கும். தந்தைக்கு குட் நியூஸ் வரப்போகு துங்க. திடீர் அதிருஷ்ட வாய்ப்பு வரும். பரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்குப் பிறந்த வீட்டில் தங்க நகைகள் வாங்கித் தருவாங்க. எந்த ஒரு விஷயமும் முயற்சித்ததால் வெற்றியைத் தரும்.

தனுசு

மம்மிக்கு திடீர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தால் டென்ஷன் வேண்டாம். கடைசி நிமிடத்தில் அது ரத்தாகக்கூடும். அல்லது எளிமையான அறுவை சிகிச்சையினால் அற்புத மான ஆரோக்யம் மீளும். குளிர்ச்சியான பொருட்களைச் சற்று அவாய்ட் செய்ங்க. பிரச்சினை யில்லாமல் இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். அதில் நீங்க மேலும் மேலும் முன்னேறு வீங்க பாருங்களேன். லாபங்களும் வருமானங்களும் நீங்க நினைச்சதைவிட அதிகமாகக் கிடைக்கும். நல்ல விஷயங்களையும் மற்றவர்களுக்கு நன்மை தரும் விஷயங்களையும் பேச ஆரம்பிச்சிருக்கீங்க. சூப்பர். இப்படியே எப்பவும் பேசினால் நன்மைகள் கூடுதலாகும். கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம். அதையெல்லாம் அனுமதிக்கவே அனுமதிக்கா தீங்க. காத்திருந்தால் பொன் மழை உண்டுங்க.

மகரம்

உங்களுக்கு அபாரத் திறமை உள்ளது என்று யாராச்சும் எப்பவும் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்கணும். இப்ப இன்னுமே கேட்க வேண்டாம். உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக்கிட்டு “நீ அபாரத் திறமைசாலி. உன்னால் வெல்ல முடியும்” என்று சொல்லிக்கிட்டே இருங்க. சகோதர சகோதரிகளுடன் பிரச்சினை வராமல் அனுசரிச்சுப் போங்க. ப்ளீஸ். சீக்கிரத்தில் அதன் அருமை புரிந்து அவங்க பாட்டுக்கு உங்க கிட்ட நன்றி உணர்ச்சியோட வருவாங்க. உங்க பெருமையை ஊரே பேசும்போது அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன? அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டி வந்தால் சற்று அமைதியா யோசித்து நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு செய்ங்க. தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்திலும் உங்க பணிகளுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 வரை

கும்பம்

உங்களுக்கு இருக்கும் இளகிய மனசை அப்டியே மாற்றாம வெச்சுக்குங்க. அவன் சொன் னான் இவள் சொன்னாள்னு உங்க அடிப்படை குணத்தை மாத்திக்காதீங்க. பெரிய அளவில் பயமுறுத்திய உடல் கோளாறுகளும் உபாதைகளும் எளிமையாய் சரியாகி நிம்மதி வழங்கும். வார ஆரம்பத்தில் உங்க அலுவலகப் பேச்சு பெரிய நன்மை தரப்போகுது. உற வினர் மத்தியிலும் உங்க பஞ்சாயத்து நல்லாவே பலன் தரும். நிறைய நிறைய செலவுகள் இருந்தாலும் எல்லாமே நல்ல காரணத்துக்காகத்தான் இருக்கும். குறிப்பாய் சுப நிகழ்ச்சிகள், கோயில்கள் என்று செலவு செய்வீங்க. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானங்களை எதிர்பார்க்கலாம்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை

மீனம்

நிறையப்பேர் உங்க கிட்ட ஆலோசனை கேட்பாங்க. சட்டென்று வேகமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் பரவாயில்லை. சரியாகவே தீர்மானிப்பீங்க. அடிப்படை புத்திசாலித்தனமும், இயல்பாக உள்ள சமயோசிதமும் கைகொடுக்கும். உத்யோகத்தில் உங்க மேலதிகாரியின் நல்லெண்ணம் உங்க மேல் பதியும். ரொம்ப நாளாய்த் தேடிக்கிட்டிருந்த உத்யோகம் டக்கென்று கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சகோதரர் களுக்கு நிறைய நன்மைகள்… பெரிய நன்மைகள் உண்டு. அட சந்தோஷப்படுங்க. ஏன் தெரியுமா? அவங்களால உங்களுக்கு நன்மைகள் உண்டு. குழந்தைங்க புகழ் பெற்று வெளிச்ச மேடையில் கைதட்டல் பெறுவாங்க. வெளிநாட்டு மேடையாகவும் அது இருக்கக்கூடும் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை