மேஷம்  

பேச்சினாலேயே பிறரை வெல்லும் ஆற்றல் வரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சற்று அதிக இன்புட் போட வேண்டி வரும். இப்போதைக்குப் படிப்பைவிட எதுவுமே அதிக முக்கியமில்லை என்கிற புரிதல் இருந்தால் போதும். தந்தைக்கு சில சிறு உபாதைகள் வந்தாலும் முழுமையாகச் சரியாகிவிடும். சற்று கவனமாகப் பார்த்துக்குங்க. குடும்பத்தில் ஏற்படும் சில்லறைக் குழப்பங்களும் பிரச்சினைகளும் உங்க அமைதியான அணுகுமுறையால் சரியாகிவிடும். எல்லாம் சற்று நிதானமாய்த்தான் நடக்கும். அதனால் என்னங்க. நல்லபடியாவே நடக்கும். அதுதானே இம்பார்ட்டன்ட்? தொழில் உத்தியோகம் புது வேகத்துடன் சிறப்பாக இருக்கும். ஆனால் சும்மாவா?  நிறைய முயற்சிகள் செய்திருக்கீங்களே?

ரிஷபம்
கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் சின்னச்சின்னதாய்த் தடைகள் இருக்கத்தான் செய்யும். உங்கள் புத்திசாலித்தனமான தீர்வுகள் உதவும். டென்ஷன் ஆவாதீங்க. அதிகமான அலைச்சலால் உடல் நலம் பாதிக்கப்படாமல் . கொஞ்சம் மருத்துவ செலவும் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகள் எல்லாமே  ஈஸியா நிறைவடையும். பண வரவு திருப்திகரமாக இருக்கும், மனதில் தெம்பு அதிகரிக்கும். வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதி சொன்னதை நிஜமாக்குவீங்க. சில சிகிச்சைகள் எடுக்க வேண்டி வரலாம்.  ஆனால் தகுந்த நேரத்தில் தாமதமின்றி ஆரோக்யத்தைப் பாதுகாத்துக்கொள்வீர்கள். தாயாருக்கு நன்மைகள் அதிகரிக்கும். அவரால் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: அக் 4 முதல் அக் 6 வரை

மிதுனம்

கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதைவிட.. புத்திக்கூர்மையால் எதிரிகளை வெல்லலாம். யாரையும் கவிழ்க்கும் எண்ணத்துக்கு ‘நோ’ சொல்லிடுங்க. நீங்க பிசினஸ் செய்கிறவரா? தொழிலில் புதிய எதிரிகள் தோன்றுவார்கள்தான். டோன்ட் ஒர்ரி. நேர்மையான முறையில் மட்டுமே அவங்களை வெல்ல நினைச்சால் பிரச்சினை வராது. உறவினர்.. ஃப்ரெண்ட்ஸ்ஸைப் பொருத்த வரையில் பெருந்தன்மையான குணத்தினால் அனைவருக்கும் உதவுவீர்கள். அவங்க உங்களைப் புகழ்வாங்க. அதைத் தலையில் ஏத்திக்காம உங்க கடமையைச் சரியாச் செய்துக்கிட்டே போங்க. ஒரு வேளை வயிற்று பகுதியில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு உடனடியாய் நல்ல முறையில் சிகிச்சை செய்து விட்டால் நோ பிராப்ளம்.

சந்திராஷ்டமம்: அக் 6 முதல் அக் 9 வரை

கடகம்

நிறையச் செலவுகள் இருந்தாலும் எல்லாமே நல்ல நல்ல செலவுகளாகவும் சுப செலவுகளாகவுமே இருக்கும். உத்யோகத்தில் ஓர் இனிய திருப்பம் உண்டு. அது நீங்க கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தாலும்  ஆச்சர்யமில்லைங்க. மாணவர்கள் மேடை ஏறிப்பரிசு வாங்குவீங்க. பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். ஆனால் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையா எதையும் செய்யுங்க. பிரச்சினைகள் உங்களைப் பார்த்து பயந்துக்கிட்டுத் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிடும். தந்தையின் ஆரோக்யம் பயமுறுத்தினாலும் உடனே சரியாகி நிம்மதியளிக்கும். மாணவர்களுக்கு சந்தோஷமும் மன நிம்மதியும் அளிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். பொறுப்புங்க அதிகரிக்கும். சமாளிச்சுடுவீங்க. கவலைப்படாதீங்க.

சந்திராஷ்டமம்: அக் 9 முதல் அக் 11 வரை

சிம்மம்

வேலை பார்க்கும் இடத்தில் எறும்புக்கடி சைஸ்ல எந்த வகையில் கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் மிகவும் தைரியமாக எதிர் கொள்வீர்கள். அநாயாசமாய் சமாளிச்சு  நிமிர்ந்துடுவீங்க. ஆன்மீகப் பயணம் உண்டாகும். என்ஜாய். உடல் நலத்தை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்பவர்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. மனசை அமைதியா வைச்சுக்குங்க. ஒன்று மட்டும் நினைவு வெச்சுக்குங்க. உண்மையும் நேர்மையும் உள்ள உங்களை ஒருத்தராலும் எதுவும் செய்ய முடியாதுங்க. மேடையில் ஏறிப் பரிசும், பாராட்டும், கைதட்டலும் பெறுவீங்க. திருமணம் இதோ அதோ என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்ததல்லவா? இப்போ அது வந்தாச்சு வந்தாச்சு.  குழந்தைங்க விஷயத்தில் சின்னஞ்சிறு பிரச்சினைகள் வரும். மிகச் சில நாட்களில் அவை தீரப்போகுதுங்க. டோன்ட் ஒர்ரி.

கன்னி

பேச்சில் புத்திசாலித்தனமும் கவரும் தன்மையும் இருக்குமுங்க. அதனால் எல்லோரும் பாராட்டும்படியா பேசுவீங்க.. நடந்துங்ககுவீங்க…. மற்றவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பீங்க.. உறவினர் மற்றும் நண்பர்களி டையே மத்தியஸ்தம் செய்வீங்க. தொழில் உத்தியோகத்தில் மந்த நிலை இருக்கும். ஆனால் சீக்கிரத்தில் பிக் அப் ஆவதற்கான அறிகுறிகளும் தென்படும். ஏற்பாடுகளும் செய்துடுவீங்க. நல்ல காரணங்களுக்காகவும் இன்வெஸ்ட்மென்ட்களுக்காகவும் அதிகமான செலவுகள் உருவாகும். பேச்சில் கொஞ்சம் ஜாஸ்தி கவனம் தேவைங்க. அதைமட்டும் மறந்துடவே மறந்துடாதீங்க.  கமிஷன் வியாபாரம் அவ்ளவா சிறப்பில்லை. புதிதாய் இறங்க நினைப்பவர்கள் போஸ்ட்போன் செய்ங்க. ஏற்கனவே அதில் உள்ளவங்க கவனிப்பை அதிகப்படுத்துங்க.  

துலாம்

வீட்டில்.. பள்ளியில்.. கல்லூரியில்.. நண்பர்களிடையே.. அக்கம்பக்கத்தினருக்கிடையே ஏற்பட்ட டிஷ்யூம் டிஷ்யூம்கள் .. மனஸ்தாபங்கள் அண்ட் சச்சரவுகளுக்குப் பஞ்சாயத்துத் தீர்வு செய்து அவங்களுக்கிடையே மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் விதைச்சு வியக்க வைப்பீங்க. மொத்தத்தில் நல்ல பெயர் எடுப்பீங்க. தாயாருக்காக அல்லது தாய் வழி உறவினருக்காக நல்ல வகையில் செலவு செய்து அவரின் நல்லாசியைப்பெறுவீங்க. ஒரு வேளை தாய் வழி சொத்துகள் ஏதும் வரவேண்டியிருந்தால் கட்டாயம் அது உங்களைத் தேடிக்கிட்டு வீடு வந்துடுங்க.  கல்விக்காக நிறையச் செலவுகள் செய்ய வேண்டி வரும். உங்க சொந்தக் குழந்தைங்களுக்காகவும் இருக்கலாம். ஏழை மாணவர்களுக்காகவும் இருக்கக்கூடும்.

விருச்சிகம்

பரபரவென்று பிசியாக இருப்பீங்க, சரியான தீர்மானங்களை முறையாக எடுப்பீங்க. அதனால் பல வித சிக்கல்களை முன்கூட்டியே ஊகித்து அவற்றிலிருந்து முறையாக மீளுவீங்க. குழந்தைகளின் நடவடிக்கை யால் மனதில் கவலை தோன்றும். தீர்வு காண முயற்சி செய்ங்க. சரியாயிடுவீங்க. கணவர்/ மனைவியுடன் நடுவில் இருந்த பிணக்குகளும் ஊடல்களும் ஓடி ஒளியும் என்பதால் அவங்களோட நெருக்கம் அதிகரிக்கும். போக்குவரத்தில் கவனம் தேவைங்க. வாகனப் பராமரிப்பிலும் அதிகக் கவனம் தேவை. பெரிய அளவில் பயப்பட ஏதும் இல்லைன்னாலும்  இப்போது அதைக் கவனிக்காட்டி அப்புறம் செலவு வைக்கும்ல. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில்/ வியாபாரம் (சுருக்கமாய்ச் சொன்னால் பிசினஸ்)  மிகவும் சிறப்பாக இருக்கும். பண வரவும் மனம் மகிழத்தக்க வகையில் இருக்கும்.

தனுசு

மாணவர்களுக்கு உங்களால் உதவி கிடைக்கும். எனவே அவர்களின் நல்வாழ்த்தும் அவர்களின் பெற்றோரின் ஆசியும் கிடைக்கும். தயவு செய்து நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நல்லவர் யார், கெட்டவர் யார் என்று ஆராய்ந்து பிறகு நெருங்கிய நட்பு கொள்ளுங்கள். அது வரை சற்றுத் தள்ளியே இருங்கள். மனசுவிட்டுப் பேசுகிறேன் என்று ரகசியங்களைப் பகிர வேண்டாங்க. ஜாக்கிரதை. இப்படிச் சொல்லிட் டேனே என்பதற்காக நண்பர்களை விரோதித்துக்கொள்ளவும் வேண்டாமுங்க. தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமணம் சட்டென்று வந்தேவிடும். சகோதர சகோதரிகளுக்கு நன்மை ஏற்படும். அது அனேகமாக உங்களால் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு குழப்பம் உண்டாகும். அம்மாவுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். எனினும் நல்லாயிடுவாங்க.

மகரம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கூடிவரும். ஆசிரியர்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு. அரசாங்க உத்யோகம் மற்றும் வங்கி வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு ஆஃபர் லெட்டர் வந்தாச்சு. நகைங்களுக்காகவும் ஆடை ஆபரணங்களுக்காகவும்  கொஞ்சம் அதிகமாய்ச் செலவு செய்யறீங்க. கொஞ்சம் பார்த்துக்குங்கப்பா. அம்மாவுக்கும் உங்களுக்கும் சண்டை வராம பார்த்துக்குங்க.  அவங்க ஆசி உங்களுக்கு என்றைக்கும் தேவை. அதை மறந்துடாதீங்க. படிப்பில் மேன்மை நிலை உருவாகும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கும். குறிப்பாக அவங்க எதிர்பாலினத்தவங்க என்றால் கேட்கவே  வேண்டாம். அமைதியாக உங்களை நிரூபிங்க.  வேலையில் முழு கவனம் செலுத்துங்க.  ஒருத்தரும் உங்களை அசைச்சுக்க முடியாது.

கும்பம்

குழந்தைங்களை அதிகம் கண்டிக்கிறேன் பேர்வழின்னு டார்ச்சர் பண்ணாதீங்க.  பாவங்க அவங்க. கூடிய சீக்கிரத்தில் நிச்சயமாய் அவங்களைப் பற்றிய  பிரச்சினை சரியாகப் போகுது. கலைத்துறையில் உள்ள வங்களுக்கு நன்மைகள் வந்து குவியும் பார்த்துக்கிட்டே இருங்க. வார மத்தியில் எந்த வம்புக்கும் போகாமல், யாரைப் பற்றியும் யாரிடமும் விமர்சனம் செய்யாமல், ஜோக் என்ற பெயரில் மட்டம் தட்டாமல் கம்முனு இருங்க. அப்பாவுக்கு உஷ்ணம் சம்பந்தமான  பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கவனமாய் இருக்கச் சொல்லுங்க. குழந்தைகளுக்கோ, கணவருக்கோ/ மனைவிக்கோ, தந்தைக்கோ இத்தனை காலம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாகி  நிம்மதி பிறக்கும். சகோதர சகோதரிகளுடன்  சிறு பிரச்சினை கள் ஏற்பட்டால் தூங்காமல் கவலைப்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். யாரோ ஒருவர் சொல்லப்போகும் சின்ன “ஸாரி”யில் எல்லாம் சரியாகப்போகுதுங்க.

மீனம்

எந்தத் தீர்மானம் எடுத்தாலும் சற்றே கவனமாகக் காலை எடுத்து வையுங்கள். எதிலும் அவசர முடிவுகள் வேண்டாம். நல்ல செலவுகள் மற்றும் செலவை மிஞ்சும் வரவு உண்டு. ஆரோக்யத்தை சற்றுப் புறக்கணித்து சாப்பாட்டு விஷயத்தில் ரிஸ்க் எடுக்கிறீர்கள். கவனமாய் இருங்க. தந்தையின் புத்திசாலித்தனமான நடவடிக்கையால் குடும்பம் சிரமத்திலிருந்து அல்லது ஆபத்திலிருந்து தப்பும்.  உங்க டாடிக்குப் பெரிய அளவில் புகழ் வரப்போகுது. அவர் அவார்ட்/ ரிவார்ட்/ கைதட்டல்/ பரிசு/ பாராட்டு பெறப்போகிறார். ஒரு வேளை ஆரோக்யப் பிரச்சினை வந்தால் எளிய சில சிகிச்சைகள் பெற்று நல்லபடியா ஆவீங்க. வாகனங்கள் ஓட்டும்போது மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் ஓட்டுங்க. வங்கி சேமிப்பு சற்றே அதிகரிக்கும். கமிஷன் வியாபாரம் முன்பைவிடச் சிறப்பாக இருக்கும். படிப்பில் மேன்மை உண்டாகும். தாய் மாமனின் உதவி கிடைக்கும்.