வார ராசிபலன்: 25.10.2019 முதல் 31.10.2019 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

“அடேடே. பொற்காலம் என்பது இதுதானா?“ என்று வியந்து ரசித்து அனுபவிப்பீங்க.  கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். மேலும் கேட்காததும் .. நினைத்துப் பார்க்காததும்கூட நிறைவேறுங்க. செம ரொமான்ட்டிக்கான வாரம்.  லவ் நிறைந்த வாரம். உங்களைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச உடல் உபாதைகளும் வாரக் கடைசியில் டாட்டா சொல்லிவிட்டு ஓடியே போய்விடும். டோன்ட் ஒர்ரி. கணவர்/ மனைவியின் புத்திசாலித்தனமும்.. கவரும் அம்சமும் அதிகரிக்கும். இதனால் அலுவலகத்திலும் உறவினர் மத்தியிலும் கிளாப்ஸ் வாங்குவாங்க. நண்பர்கள் பெரிய அளவில் உதவி செய்வாங்க. குறிப்பா  வெளிநாட்டில் உள்ளவங்களால நன்மை ஏற்படப்போகுது. மகன்/ மகளுக்கு அரசாங்க நன்மைகள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: அக் 29  முதல் அக் 31 வரை

ரிஷபம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

ஒன்று மட்டும் நினைவு வெச்சுக்குங்க. உண்மையும் நேர்மையும் உள்ளவரைக்கும் உங்களை ஒருத்தரா லும் எதுவும் செய்ய முடியாதுங்க. உங்களிடம் பலரும் நல்ல எண்ணங்களுடன் பழகுவாங்க. சுற்றுலா போயிட்டு வர வாய்ப்பு ஏற்படும். அதுவும் உறவினர் க்ரூப்போட போவீங்க. மகன் அல்லது மகள் கேட்ட பரிசு பொருள் வாங்கி தருவீங்க. சொத்து பராமரிப்பு, பாதுகாப்பில் கொஞ்சம் அதிகக் கவனம் வேணுங்க. யாருக்காகவும் எதுக்காகவும் கையெழுத்துப் போடாதீங்க. இப்போதைக்குப் பெரிய இன்வெஸ்ட்மென்ட்டைத் தவிர்க்கப்பாருங்க. ஒரு வேளை கட்டாயம் செய்துதான் ஆகணும்.. வாங்கித்தான் ஆகணும் என்ற நிலை வந்தால் உங்க ஹாரஸ்கோப்பைக் குடும்ப அஸ்ட்ராலஜர் கிட்ட காண்பிச்சு கன்ஸல்ட் செய்து பிறகு டிசைட் செய்ங்க.

மிதுனம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

உடல் நலத்தை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக்கொள்பவர்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது. மனசை அமைதியா வைச்சுக்குங்க.  வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். வீண் விரயங்களை தவிர்த்து சுப விரயமாக மாற்ற சொத்து சுகம் வாங்கலாங்க.  நண்பர்கள் உற்றார் உறவினர் முலம் பிரச்சனைகள் வருவதற்குக் கொஞ்சம் சான்ஸ் இருக்கவே.. வாதம் விவாதம் எதிலும் கலந்துக்காதீங்க. தட்டிப்போயிக்கிட்டிருந்த சுப விஷயங்கள் எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக நடக்குமுங்க. அட்லீஸ்ட் அதற்கான ஏற்பாடுகளாவது ஆரம்பிச்சுடும். முரட்டுத்தனத்தையும் தீய நட்பையும் தயவு செய்து விட்ருங்க. ப்ளீஸ். மிகுந்த புத்திசாலித்தனம் மற்றும் ஞானம் ஏற்படும். உங்களுக்கு மட்டும் இல்லாமல் உங்கள் லைஃப் பார்ட்னருக்கும் அறிவாற்றல் அதிகரிப்பதால் நல்லவை நடக்கும்.

கடகம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

மகன் அல்லது மகளுக்கு அரசாங்க மற்றும் வங்கி வேலைகள் கிடைக்கும்.  ஒரு நல்லவர்/ பெரிய மனிதர் உதவுவதால் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்மைகள் நடக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். நிலம் வீடு வகைகளில் மெல்ல  மெல்ல ஆதாயம் அதிகரிக்கும். எந்த வகையில் கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் மிகவும் தைரியமாக எதிர் கொள்வீர்கள். அதே போல் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வரக்கூடிய பிராப்ளம்ஸையும் சுலபமாய்த் தீர்த்து வைச்சு அவங்க கிட்ட நல்லபெயர் எடுப்பதோடு.. இத்தனை காலம் கெட்டுப்போயிருந்த நல்லுறவெல்லாம் இனி சூப்பராய்க்கூடிடும் பாருங்களேன். வெளியூரில் வெளி நாட்டில் இருந்த உறவினரை நீங்க சந்திப்பீங்க.

சிம்மம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

உங்க குழந்தைங்களோட புத்திசாலித்தனம் அதிகரிக்கும். அவங்களுக்குப் படிப்புக்கு வேண்டிய உதவித்தொகை போன்றவை கிடைக்கும். அல்லது அவங்க வருமானம் உயரும். திருமணமும் நடக்க முதல் ஸ்டெப் வைக்க வாய்ப்புண்டு. உங்க உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பண வரவும் மனம் மகிழத்தக்க வகையில் இருக்கும். அம்மாவுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் சிம்ப்பிளா சரியாகிவிடும். அதுக்காக டென்ஷனெல்லாம் ஆக வேண்டாமே. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு குழப்பம் உண்டாகும். அம்மாவுக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். நண்பர்களை விரோதித்துக்கொள்ள வேண்டாம். அவங்க ஹெல்ப் உங்களுக்குக்கூடிய சீக்கிரம் கிடைக்கப்போகுது. அப்போ அசடு வழிவீங்க.

கன்னி

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபம் தரும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அதனால் என்னங்கள். மனசில் பதற்றமோ, பயமோ, கவலையோ, அழுகையோ தரும் அளவு பெரிய பிரச்சினையெல்லாம் கட்டாயம் நோ.  பெண்களின் உதவி கிடைக்கும். உங்களால் உங்க நண்பர்கள் வீட்டிலும் உறவினர்கள் வீட்டிலும் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உங்கள் வீட்டிலும் ஏன் உங்களுக்கேகூட சுப நிகழ்ச்சிகள் உண்டு. மனைவிக்கு/ கணவருக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மம்மிக்குப் பெரிய அளவில் நன்மைகள் ஏற்படும். புது வாகனம் வாங்குவீங்க. நீங்க மாணவரா.. குட் குட். இனி எல்லாம் சந்தோஷ செய்திகள்தான். திடீர்னு படிப்பில் ஆர்வம் ஏற்பட்டுக் கலக்குவீங்க.

துலாம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

மம்மி அண்ட் டாடிக்கு நிதி வசதி கூடும். மாணவர்கள் சற்று அதிக கவனத்துடன் சிரத்தையாப் படிக்கணும். கவனம் சிதறாமல் கான்ஸன்ட்ரேட் செய்து படித்தால் வெற்றி அபாரமாய் இருக்கும். உங்க குழந்தைகளின் புகழ், பெருமை, பாராட்டு அதிகரித்துக்  கைதட்டல் பெறுவார்கள். உங்களுக்கு சம்பளம் உயருமுங்க. சகோதர சகோதரிங்களுக்கு உங்களால நன்மை கூடுதலாகும். ஆனால் அவங்க நன்றியோடு இல்லையே என்னும் சின்ன உறுத்தலும் ஆதங்கமும் மனசில் இருக்கும். படிப்பில் மேன்மை நிலை உருவாகும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கும். அதற்கு நீங்கள் ரியாக்ட் செய்யாமல் கொஞ்சமே கொஞ்சகாலம் பொறுமையா இருந்தால் போதுங்க. வெற்றிதான் உங்களுக்கு.

விருச்சிகம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

வீடு நிலம் வாகனம் போன்ற வகைகளில் சகோதரர்களுடன் சச்சரவுகள் தோன்றாதபடி பார்த்துக்குங்க. ஒரு வேளை இதையும் மீறி.. சகோதர சகோதரிகளுக்குள் யுத்தமெல்லாம் இருந்தால் கண்டுக்காமல் மேலே மேலே போங்கப்பா. நாலே நாளில் வெள்ளைக்கொடி பறக்க விட்டு சிரிச்சுக்கிட்டே நெருங்கிடு வீங்க. அப்பாவுக்கு ஏகப்பட்ட நன்மைகள் இருக்கும். ரெடியா இருக்கட்டும். அலுவலகம் சம்பந்தமா நீங்க வெளியூர்.. வெளிநாடு போக வாய்ப்பு உள்ளதுங்க.  உற்றவர்களைப் பிரிய நேர்ந்தாலும் அது சந்தோஷமான ரீஸனுக்காகத்தான் இருக்கும். எனவே.. டோன்ட் ஒர்ரி…ஹாப்பியா இருங்க. தொழில் உத்தியோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகள் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார்கள். ஆகவே அது போன்ற விஷயங்கள் பற்ற டென்ஷன் கின்ஷன்லாம் வேணாம்.

தனுசு

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

கழுத்தை நெறித்துக்கொண்டிருந்த கவலைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீங்க. உங்களுக்குப் புது வேலையே கிடைக்கக்கூட வாய்ப்பிருக்குங்க. உங்களுக்கு அப்படி ஓர் எண்ணம் இருந்தால் முயற்சி செய்ய இது உகந்த நேரம். மம்மிக்குப் பாராட்டும் புகழும் கூடும். நீங்கள் மாணவரா? வாவ். உங்களுக்குக் கைதட்டல் கிடைக்கும். அந்தக் கைதட்டலுடன்… மேடையில் வெளிச்சத்தில் பாராட்டும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் குடும்பத்தில் அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும். வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. தொழில் சிறக்கும் அதிகாரிகளின் ஆலோசனை தொழில் மேன்மைக்கு கை கொடுக்கும்.

மகரம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

விலை உயர்ந்த வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீங்க. வாகன வசதி அதிகமாகும். வாழ்க்கையில்  அடிப்படை வசதிகள் உயரும். நீங்க பல காலம் ஆசைப்பட்ட பொருட்கள் வாங்குவீங்க. உத்யோகம் மற்றும் பர்சனல் விஷயங்களில் நீங்க போட்டிருந்த புதிய திட்டங்கள் நிறைவேறும். சண்டை போட்டு விலகிய வங்க  மற்றும் கேஸ் போட்டவங்ககிட்ட சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். அதே போல் நீங்க கொடுத்திருந்த தொகைகளும் திரும்ப வரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கைப் பெறும்பொருட்டு இப்போதைக்கு யார் கிட்டயும் சண்டை வேண்டாங்க.

கும்பம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரித்து மேலிடத்தில் பாராட்டுப் பெறுவீங்க. கணவன் மனைவிக்குள் சந்தோஷமும் நிம்மதியும் நிலவும். காதலர்களுக்கு வெற்றி உண்டாகும். அலுவலகத்திலோ, கல்லூரி யிலோ எதிர்பாலினத்தினரால் லாபமும் நன்மையும் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்டுவிடுவீங்க. எப்பவோ செய்துவைச்சிருந்த இன்வெஸ்ட்மென்ட்கள் பலன் கொடுக்கும். உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சகோதர சகோதரிகள் மிக உயர்ந்த நிலையை எட்டுவாங்க. உங்களுக்கும் அதனால் பெருமிதம் ஏற்படும். பிகாஸ் அவங்க உங்களை விட்டுக்கொடுக்காம பேசுவாங்க. பெருமைப்படுத்துவாங்க.

சந்திராஷ்டமம்: அக் 25 முதல் அக் 27 வரை

மீனம்

தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள்.

அம்மா வழி, அப்பா வழி என்று நெருங்கிய உறவினர்களைச் சந்திக்கவும், உட்கார்ந்து பழங்கதைகளெல்லாம் பேசவும் ஒரு சூப்பர் வாய்ப்பு வரும். அலுவலகத்திலோ… நண்பர்கள் மத்தியிலோ ஒரு சின்ன வெற்றியை சாதித்துப் பெருமிதம் அடைவீங்க. புது வாகனம் வாங்க சான்ஸ் இருக்கு. நொந்து போயிருந்த மாணவர்களுக்க இனிதான் வசந்தம் துளிர்க்க ஆரம்பிக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் யாருக்கேனும் சுப நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். வாகனங்களால் செலவுகள் ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக்குங்கப்பா.

சந்திராஷ்டமம்: அக் 27 முதல் அக் 29 வரை

 

More articles

Latest article