வார ராசிபலன்: 25.06.2021 முதல் 1.7.2021 வரை! வேதாகோபாலன்

Must read

மேஷம்

 நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாக நிறைவேறும். பிசினஸ் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக வியாபாரத்தில் ஒரு சில நெருக்கடிகள் தோன்றினாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு ஈஸியா வெற்றி பெறுவீங்க. இதுவரை இருந்து வந்த நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் நினைச்ச காரியங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவாங்க. திருமண முயற்சிகள் கைகூடும். சகோதரரால் உதவிகள் கிடைக்கும். மேரேஜ் ஆகாதவர்களுக்கு மேரேஜ் முடிவாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

 ரிஷபம்

அவசர முடிவுகளை எடுக்க வேணாம். குறிப்பா ஆஃபீஸ் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவா நடந்துக்குங்க. அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுங்க. குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாய்க் கையாளுங்க. கடன் தொடர்பான விஷயங்கள் உங்களுக்குச் சாதகமா இருக்கும். சொத்து சம்பந்தமான பிராப்ளம்ஸ் அனைத்தும் முடிவுக்கு வரும். தாய்வழி ரிலேடிவ்ஸ் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு சில உதவிகளைச் செய்து கொடுப்பீங்க. எதிர்பார்த்த பணவரவு உண்டு. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பிசினஸ் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிசினஸ் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நபர்கள் அறிமுகமாவாங்க. உத்யோகத்தில் வளர்ச்சி சீராக இருக்கும்.  

சந்திராஷ்டமம் :  ஜூன் 24 முதல்  ஜூன் 26 வரை

மிதுனம்

தொல்லை தந்துக்கிட்டிருந்த கடன் பிராப்ளம் ஒன்று சுமுகமாக தீரும். ஆஃபீஸ் பணிகளில் ஏற்பட்டிருந்த தொய்வு நிலை மாறி சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீங்க. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிசினஸ் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீங்க, எனவே குடும்பம் சார்ந்த செலவுகள் அதிகமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் தீரும். மருத்துவச் செலவு குறையும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீங்க. நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ் பிசினஸ் ரீதியாக உதவி செய்வாங்க. பொருளாதாரப் பிராப்ளம்ஸைத் தீர்ப்பதற்கு வழி கிடைக்கும். நண்பர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.சொத்து சம்பந்தமான பிராப்ளம்ஸ் முடிவுக்கு வந்து தீர்வு எட்டப்படும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. குடும்பத்திற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சந்திராஷ்டமம் :  ஜூன் 26 முதல்  ஜூன் 28 வரை

கடகம்

எடுத்துக்கிட்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிராப்ளம்ஸ், கணவன் மனைவிக்குள் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் அகலும். பணப்பற்றாக்குறையால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் அனைத்தும் இந்த வாரம் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும், குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீங்க. உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்குக் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பிசினஸ் வளர்ச்சி நம்பிக்கைத் தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மெடிகல் செலவுங்க குறையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் பேசி முடிக்கப்படும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உறுதியாகும். ஒரு சிலர் புதிதாக பிசினஸ் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீங்க. தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் :  ஜூன் 28 முதல்  ஜூன் 30 வரை

சிம்மம்

எடுத்த வேலையை.. பணியை… சவாலை.. வெற்றிகரமாக முடிப்பீங்க. எதிர்பார்த்த பணம் வரும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபார ரீதியாக ஒரு முக்கியமான மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு, அவர் மூலம் வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அலுவலகம் சம்பந்தமான வேலையில் சுறுசுறுப்பாக பணியாற்றி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீங்க. மனதில் தேவையில்லாத பதட்டம் இருக்கும். ஆனாலும் எந்த வேலைகளிலும் தொய்வு இருக்காது. வியாபார ரீதியாகவும் நல்ல வளர்ச்சியைக் காண்பீங்க. புதுசா பிசினஸ் தொடங்கும் எண்ணம் உடையவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். நிதானமாகச் செயல்பட வேணும். அவசர முடிவுகள் எடுக்க வேணாம். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும்போது கவனமாக இருங்கப்பா. பணம் கொடுக்கல்-வாங்கல் அறவே கூடாது. வீண் விவாதங்களை தவிர்க்கணும்ங்க.

சந்திராஷ்டமம் :  ஜூன் 30 முதல்  ஜூலை 3 வரை

கன்னி

ஆஃபீஸ் பணிச்சுமை கூடும். கடுமையாக உழைச்சு வேலைங்களை முடிப்பீங்க. பிசினஸ் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீங்க. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒருசில முதலீடுகள் செய்யும் எண்ணம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். மொபைல்/ மெயில்/ மெஸேஜ் வழித் தகவல் மன மகிழ்ச்சி தரும். வெளிநாடு வாழ் ஃப்ரெண்ட்ஸ் அல்லது ரிலேடிவ்ஸ் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. எதிர்பாராத பணவரவு ஏற்படும். நன்மைகள் அதிகமாக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் ஆரோக்கியம் மன நிறைவைத் தருவதாக இருக்கும். தேவையில்லாமல் வெளியே செல்ல வேணாம். பயணங்களைத் தவிர்க்க வேணும். மனஉறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கும். நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் பொறுமையாக பேசுங்கள். நிதானத்தை இழக்க வேணாம்.

துலாம்

குடும்பத்தில் அமைதி நிலவும் இதுவரை இருந்த பிராப்ளம்ஸ் அனைத்தும் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வாங்க. ஆஃபீஸ் வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். சேவை சார்ந்த பிசினஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் பணவரவும், புதிய வாடிக்கையாளர்களும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். இந்த வாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு பிசினஸ்களை செய்யும் ஆர்வம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பிசினஸ் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

அவசர முடிவுகள் எடுக்க வேணாம். தேவையில்லாத பிராப்ளம்களில் தலையிடாதீங்க. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாக பேசுங்க. கோபத்தை முற்றிலுமாகத் தவிர்க்க வேணும். லாஸ்ட் வீக் இருந்து வந்த சில பிராப்ளம்ஸ் இந்த வாரம் முடிவுக்கு வரும்.  ஆஃபீஸ் பணிகளில் ஏற்பட்டிருந்த ஒரு சில குறைகளையும் சரி செய்து விடுவீங்க. வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சுயபிசினஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக ஏற்றம் இருக்கும். தரகு பிசினஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும். சுப காரியட்ப பேச்சுகள் மனதிற்கு நிறைவைத் தரும். வருமானம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். வியாபார விஷயமாக நீங்க சந்திக்க நினைச்சிருந்த நபரைச் சந்திப்பீங்க. கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. பிசினஸ் தொடர்பான ஒரு சில பிராப்ளம்களை முடிவுக்குக் கொண்டு வருவீங்க.

தனுசு

அதிகப்படியான நன்மைகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கடன் தொடர்பான பிராப்ளம்ஸ் அனைத்தையும் பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப விசேஷங்கள் உறுதியாகும். தாய்வழி உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். பணியிலிருந்த டென்ஷன்கள் படிப்படியாக விலகும். எதிர்பாராத பதவி உயர்வு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. சொத்து சம்பந்தமான பிராப்ளம்ஸ் அனைத்தும் பேசி தீர்க்கப்படும். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார வருவாய் ஏற்படும்.

மகரம்

குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீங்க. வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீங்க. பெண்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேணாம். கோபத்தைக் கட்டுப்படுத்தணும்ங்க. முயற்சித்த எந்த வேலையும் சரியாக நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேணும். ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். பிசினஸ் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். ஆஃபீஸ் பணிகள் ஈஸியா முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சகோதரர் குடும்பத்திற்கு ஒரு சில உதவிகளைச் செய்து தர வேண்டி வரும். அமைதியா இருங்க. அவசர முடிவுகளை எடுக்க வேணாம். பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேணாம். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்க. உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேணாம். செலவுகளைக் கட்டுப்படுத்தணும்ங்க.

கும்பம்

குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திடீர்ப் பயணங்கள் ஏற்படும். கவனமுடன் செயல்படுங்க. அலட்சியமா இருந்தால் சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். எவரிடமும் கோபத்தைக் காட்ட வேணாம். மனசஞ்சலம் ஏற்படும். முன்பிருந்த ஒன்றிரண்டு பிராப்ளம்ஸ் இந்த வாரம் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி சற்று மெனக்கெட்ட பிறகே கிடைக்கும். ஆஃபீஸ் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கி ஒன்று வசூலாகும். பிசினஸ் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக்கிட்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிராப்ளம் முடிவுக்கு வரும்.

மீனம்

மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். பணத்தேவைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்ப்படும். சொத்து தொடர்பான பிராப்ளம்ஸ் முடிவுக்கு வரும். புதிய பிசினஸ் வாய்ப்புகள் அல்லது வியாபார வாய்ப்புகள் தேடி வரும். ஆஃபீஸ் பணியில் பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் போன்றவை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாகவே இருக்கும். வியாபாரம் மற்றும் பிசினஸ் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். உங்களுடைய வியாபாரத் திறமைகளை வெளிப்படுத்தி புதிய உத்திகளைக் கையாண்டு வளர்ச்சியை நோக்கிச் செல்வீங்க. பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும். எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கி வசூலாகும். ஆஃபீஸ்த்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

More articles

Latest article