மேஷம்

கருணையும் இரக்கமும் கனிவும் உங்களை எஸ்கலேட்டர்ல வைத்து கிரேனில் உயர்த்தி மத்த வங்க கண்ணுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும். டாடிக்கு நன்மைகள் அதிகரிக்கும். உங்க லக் உயரும். கணவரோட/ மனைவியோட கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. குடும்பத்தில் யாருக்கேனும் மாலையும் மேளமும் சேர்ந்து வரும்.  பாதக எண்ணங்கள் உங்களுக்கு பைபை சொல்லி விலகும். கோயில்களுக்கு விசிட் செய்வீங்க. ஃப்ரெண்ட்ஸ் மற்றும் உறவினர் வீட்டு விசேஷங்களில் சாப்பாடு பரிமாறுவது உள்பட நிறைய வேலைங்களை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வீங்க. சகோதர சகோதரிகளிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லதுங்க. பேச்சில் கவனம் வேணும்.  சிந்தனையை ஒருமுகப்படுத்த வேணும். மற்றபடி அதிருஷ்டம் பல நாள்கழித்து இப்போ உங்களுடன் கை கோர்த்துவிட்டது. குட் லக்

ரிஷபம்

அரசாங்கத்திலிருந்து நன்மை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வர வேண்டிய தொகையெல் லாம் டாண் டாண் என்று வரப்போவதாக உறுதி கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் செல்ல வாய்ப்பு உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. உங்க வீட்டிலேயும் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புக்கள் உண்டு. உங்க பேச்சினால் உங்களுக்கே சமீபத்தில் பிரச்சினைங்க ஏற்பட்டுக்கிட்டிருந்தது இல்லையா. இனி அதிலிருந்து டோட்டலா வெளியே வந்துட்டீங்கப்பா. சுருங்கச் சொன்னா கடுமையான வார்த்தைங்க இனி வாயில் வராது. என்றைக்கும்போல உங்க கவர்ச்சி அம்சம் உங்க கூடயேதான் ஒட்டிக்கிட்டிருக்கும். தொழில் செய்பவர்களுக்கு தகாத நட்பால் ஏற்கனவே ஏற்பட்ட பணவிரயம் இனிமேல் தீர்ந்துடுங்க.

மிதுனம்

ஆன்மீக விஷயத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மனசில் உள்ள எண்ணங்களும் குறிக்கோள்க ளும் நிறைவேறி, விரும்பிய நிலையை எட்டுவீங்க. பணியாளர்களுக்கு முதலாளிகளின் கருணை மிக்க உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வி உதவியும், கடனும் கிடைக்கலாம். கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிடுங்க. உங்க குடும்பத்தில் நிச்சயம் தோரணம் பாயசம்னு இருக்கும். சின்ன உடல் உபாதைக்கு நடுங்கிடாதீங்க. நிச்சயமா அது தற்காலிகப் பிரச்சினைதான். டாடிக்கு சின்ன பிரச்சினைகள் இருக்கும். ஆனா அது நீங்க கற்பனை செய்த அளவுக்குப் பெரிசு இல்லைங்க. ப்ளீஸ் நம்புங்க. சகோதரர்களோட ஃபைட் பண்ணாதீங்க. தன்னம்பிக்கை காணாமல் போயிருந்துச்சில்ல.. அதை மீட்டு எடுத்து மகிழ்வீங்க. ரைட்டா? ஆல் த பெஸ்ட்.

கடகம்

தொழில் அதிபர்களுக்கு மறைமுக போட்டியும் பொறாமையும் அதனால் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். அலுவலகவாசிகளுக்குப் பயணங்களும் அதிகரிக்கும் அவற்றால் நன்மையும் கூடும். எனினும் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சமாளிப்பீங்க. பயப்படாதீங்க. மின்சாரம், நெருப்பு சார்ந்த பணியாளர்கள் கவனமாக செயல்படுவது அவசியம். அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் வக்கில்கள் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை கூட ஏற்படலாம். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பிறகு காலூன்றியபிறகு சமாளிச்சுக்குவீங்க. பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் முதலில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துக்குங்க. பேச்சில் அட்ராக்ஷன் அதிகரிக்கும். இவங்க இன்னும் கொஞ்சநேரம் பேச மாட்டாங்களான்னு ஏங்குவாங்க.

சிம்மம்

செல்வாக்கு சொல்வாக்கு எல்லாம் மேல் நோக்கிய கிராஃப்தான். தொட்டது துலங்கக் கூடிய காலம் இது. குடும்பத்தில்.. குறிப்பாகக் குழந்தைங்களுக்கு சுப காரியங்கள் கூடி வரும். அவங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளும், சிரமங்களும், தடைகளும், தாமதங்களும், படிப்படியாகச் சரியாகி அனைத்திலும் நிவர்த்தி ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் விஷயத்தில் நல்ல அனுகூலம் உண்டாகும். பூமி சம்பந்தமான இழுபறியான நிலை நீங்கி நிம்மதி உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் மிகவும் சிக்கலையும், சிரமங்களையும் சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிக சிறப்பான காலம் இப்பொழுது தொடங்குகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்கள் வரக்கூடிய காலகட்டம் துவங்கிவிட்டதுங்கோ.

கன்னி

இத்தனை காலம் உங்களைக் கண்டுக்காம இருந்த உறவினர்களும் நண்பர்களும் உங்களுடைய உயர்வு புரிந்து… உங்களுடைய மேல்மட்ட நட்புகள் பற்றிப் புரிந்து.. சிபாரிசுக்கு உங்களைத்தான் தேடி வருவாங்க. இப்போதைக்கு யாருடைய எந்த விவகாரத்திலும் தலையிட வேண்டாம். கல்யாணம்…  வீடு.. உத்யோகம் .. போன்ற எந்த விவகாரத்திலும் மூக்கையும் முகத்தையும்  நுழைக்கவே வேண்டாம்.  பச்சைப் பசேல்னு சூழல் இருக்கும் ஏரியாவில் வீடு வாங்குவீங்க. நீங்க ஸ்டூடன்ட்டா? வாவ். ஜெயிச்சுட்டீங்க. குழந்தைகள் பற்றிக் கவலைப்படுவதை கொஞ்சம் தள்ளிப்போடுங்க. நல்ல செய்தி உண்டு. எல்லாமே ஆர்ட் ஃபிலிம் மாதிரிக் கொஞ்சம் மெதுவாய்த்தான் நகரும், அதுக்காக இவ்ளோவா டென்ஷன் ஆவாங்க? பேச்சில் அமில ஃப்ளேவர் அடிக்காமல் பாதுகாத்தால் நல்லதுங்க.. இல்லாட்டி பிற்காலத்தில் உங்களுக்கே பாதிப்பு வரும்.

துலாம்

திருமணம் ஆகாதவங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணம் ஆனவர்கள் மகப்பேற்றுக்குத் திட்டமிடலாம். நீங்கள் பணி செய்யுமிடத்தில் சில பிரச்சினைகளை சமாளிக்க நேரிடலாம். ஆனாலும் குறிப்பாக உங்கள் புத்தி சாதுரியத்தினாலும் கடுமையான உழைப்பினாலும் அந்தப் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் வெளியேறி நிம்மதியடைவீங்க. எல்லார்கிட்டயும் மிகவும் அன்பாகப் பழக ஆரம்பிச்சிருக்கீங்க. இந்த உங்கள் நல்ல பழக்கம், வாழ்க்கையின் முன்னேற்றத்தை வழிவகுக்க ஹெல்ப் செய்யுங்க. மாணவர்களுக்குச் சாதகமான நிலை அமையும். திருமணத்துக்கு நாள் குறிச்சிருப்பாங்க.  உங்க லவ் இத்தனை சீக்கிரம் ஜெயிச்சு மேடை ஏறும்னு நீங்களே நினைக்கலைதானே? இனி மேலும் மேலும் நல்ல செய்திகள் காத்துக்கிட்டிருக்கு.

விருச்சிகம்

அதிக அளவிலான பொறுப்புக்களை உங்க ஆஃபீஸ்லயும் வீட்டிலும் சுமக்கப் போறீங்க. நீங்கள் செய்யாத காரியத்தில் கூட உங்க மீது பழி சுமத்தப்படும்.  அது பற்றியெல்லாம்  டோன்ட் ஒர்ரிங்க. மனசாட்சிக்கு மட்டும் துரோகம் செய்யாம இருங்க. போதும். உண்மை என்றைக்காச்சும் ஒருநாள் தன்னிச்சையாய் வெளியே வந்துடும்.  பெருந்தன்மையாக நடந்து கொள்வது நல்லதுதான் என்றாலும் உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களின் மீது அவற்றின் நல்ல தன்மைகளையும் கவனத்தில் கொண்டு கொஞ்சம் ஜாக்கிரதையாவும் நடந்துக்கறது நல்லதுங்க.  காதல், உத்தி யோகம் மற்றும் வரும்படி போன்ற விஷயங்கள் இந்த வாரத்தில் ரொம்பவே சாதகமாக இருக்கும். கொஞ்சநாளா மம்மி சொல்பேச்சைக் கேட்டு உருப்படறீங்களே. குட். குட்.  அவங்களுக் கும் சந்தோஷம். உங்களுக்கும் நன்மை.       

தனுசு

இத்தனை காலமாய்க் காதல் உறவில் நிலைமை சாதகமாக அமையாது இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் டென்ஷனாய் இருந்தீங்க. கொஞ்சம் மூட் அவுட்டாவும் இருந்தீங்க. பட் இனிமேல்  அந்தக் காதல் உறவு மீண்டும் கைக்கு எட்டும் சான்ஸ் உள்ளதுங்க. சிறு சிறு சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து வீட்டில் உள்ளனவங்களோட ஒத்துப்போவது மட்டும் இல்லாமல்.. நண்பர்களிடையே அட்ஜஸ்ட் செய்து கொள்வது மட்டுமல்லாமல்…  காதல் பயணத்தையும் உல்லாசமாக அனுபவியுங்களேன். நீங்க புதிய வியாபாரத்தைத் துவக்க வாய்ப்புக்கள் உள்ளன. பார்ட்னர்ஷிப் பற்றி கவனமாய் இருங்க.  ஃபாரின் தொடர்பான வியாபாரத்தில் சிறிது லாபம் அடைய வாய்ப்புக்கள் உள்ளன.

மகரம்

யம்மாடீ.. இவ்ளோ செலவு செய்வாங்களோ? அதுவும் ஆடை ஆபரணங்களுக்காக.. சரியாப் போச்சு போங்க..  கொஞ்சம் வங்கியிருப்பை மிச்சம் வெய்ங்க. அது பாவம் பிழைச்சுப் போகட்டும். இப்ப கை கட்டி உத்யோகமோ,  காலாட்டி பிசினசோ எதுவானாலும் செழிக்கும். ஆனாலும் புது விஷயங்களில் ஈடுபடுவதானால், வியாபாரத்தில் எந்தவகையான ரிஸ்க்கும் இப்போதைக்கு எடுக்க வேணாங்க. அவை சிலவேளை நஷ்டத்தில் கொண்டு நிறுத்தும் வாய்ப்புக்களும் இருக்கின்றன. சொல்றதுக்கில்லை. லாபம் வந்தாலும் வரலாம். இரண்டுக்குமே பாதிப்பாதி சான்ஸ் உள்ளது.  கவர்மென்ட் உத்யோகம் வேணும்னு ரொம்ப காலமாய்க் கனவு கண்டீங்களே. இப்ப கிடைச்சாச்சு பார்த்தீங்களா? 

கும்பம்

ஆபீஸ்ல உங்க முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கும். இந்த வாரம் மிகவும் அதிருஷ்டசாலியாகத் திகழப் போறீங்க, நீங்கள் தொட்டவை அனைத்தும் பொன்னாகும், இல்லையென்றாலும், ஏதோ ஒருவகையில் காரியங்கள் லாபகரமாகவே நடக்கும். நீங்க பிசினஸ் செய்பவரா? எனில் உங்க வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க பாருங்களேன். . இதனால் லாபம் அதிகரிக்குங்க. சும்மா இல்லை. அதுக்காக நிறைய உழைக்கவும் போறீங்களே!  பெரிய அளவில் தொகையை சேமித்து வைப்பீங்க. உங்கள் அமோகமான திறமையில் நம்பிக்கை வைக்கும் அதே நேரத்தில்.   அது உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்க குடும்பத்துக்கும் உதவிகரமாய் இருக்கும்.

மீனம்

யார் மீதும்.. எதன் மீதும்.. தேவைக்கு அதிகமான நம்பிக்கை வைப்பதைத் தவிர்க்க முயற்சி யுங்கள். அதுக்காக வெறுக்கணும்னும் சொல்லலைங்க. முதலீடுகள் செய்வதற்கு முன்னால் நன்றாய் யோசித்து, விஷயம் தெரிஞ்சவங்களை யோசனை கேட்டு, அதன் பிறகு செயல்படுங்க. மாணவ மாணவியர்,  மேல் படிப்புக்கு முயற்சிக்க வேண்டும். டைவர்ட் ஆகாமல் இருந்தால் மிகவும் சாதகமான பலன்கள் கிட்டும் வாய்ப்பு உண்டு. உங்கள் காதல் வாழ்க்கை சற்றுத் தீவிரம் அடையும். குடும்பத்தினருடன் உங்களுடைய உறவுகள் சீரடைந்து இல்லத்தில் உற்சாகமும் திருப்தியும் தவழும். மன நிம்மதி கிட்டும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து இப்ப உங்களால் முழு கவனத்துடன் வேலை செய்யவும் முடியும். பிரச்சினை தந்துக்கிட்டு இருந்தவங்க கிட்டேயிருந்து விடுபடவும் முடியும்.