வார ராசிபலன்: 17.7.2020 முதல் 23.7.2020 வரை! வேதா கோபாலன்

Must read


மேஷம்
இன்கம் நல்லா இருக்கும். குடும்ப ஒற்றுமையும், கணவன் – மனைவி இடையே அன்பு சூப்பரா இருக்கும். உறவினர்களுடனான உறவில் எறும்புசைஸ் மன கசப்பு உண்டாகலாம். அதனால் பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். பாராட்டுக்கள், இன்கிரிமென்ட் கிடைக்கலாம். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கலாம். பெண்களின்  அறிவுத்திறன் கூடும்.  போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபார விருத்தி ஏற்படும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசுப் பணிபுரிபவர்களுக்கு விருப்பப்படி புதிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சிலருக்குத் தேவையற்ற, எதிர்பாராத செலவுகளால் பணமுடை ஏற்படலாம்
ரிஷபம்
ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கணுங்க. தம்பதி இடையே லேசா ஃபைட்டிங் ஏற்பட லாம். அனுசரிச்சுக்கிட்டுப்போனால் அன்பு மேலோங்கும். இன்கம் மற்றும் ஃபைனான்ஸ்  சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட கூடுதல் பண வரவு இருக்கும். திடீர் ஃபாரின் பயணம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் எக்ஸ்ட்ரா கவனம் செலுத்துவது அவசி யம். நிதானப் பேச்சும் செயல்பாடும் அவசியம். தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். புதிய லோன், முதலீடுகளை தவிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சிறந்த வாரம். திடீர் இடமாற்றம் உண்டாகலாம். அதனால் நன்மை உண்டாகும்.குடும்பத்தில் உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள்.
மிதுனம்
எந்த ஒரு புது முயற்சியிலும் திங்க் பண்ணி செய்வது நல்லது. ஹெல்த்தில் அக்கறை தேவை. வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். அதில் கேர்ஃபுல்லா இருங்க. இன்கம் குறைவிருக்காது. குடும்பத்தில் ஹாப்பினஸ் இருக்கும். புதிய வேலை முயற்சி செய்பவர் களுக்கு நல்ல ரிப்ளை வரும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான சூழல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்க. உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவை
கடகம்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் நண்பர்கள் அல்லது உறவினரை சந்திப்பீர்கள். திருமண முயற்சி செய்பவர்களுக்கு சுப செய்தி வரும். செலவுகள் ஏற்பட்டாலும், கூடுதல் வருவாயால் சமாளித்துவிடலாம். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளிப்பது நல்லது. வேறு வேலை முயற்சி வேண்டாம். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
சிம்மம்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீங்க. புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படுங்க. குடும்ப உறவு களின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு நல்லது.
கன்னி
இந்த வாரம் தம்பதி ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காணுவீங்க. நண்பர்கள் ஹெல்ப் கிடைக்கும். பொறாமை காரணமாக ஒரு நண்பர்களே பகைவராகக்கூடும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கப் புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள்.  புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். உடல் உபாதைகள் காரணமாகத் தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். இட்ஸ் ஓகே  நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது ஐடியாஸ் அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
துலாம்
இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். எதிர்பாராத தனவரவும் உண்டு. தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல அட்வைஸ் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரச் செய்தி களால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  பிசினஸ் பற்றி  தொலைதூர இடங்களிலிருந்து நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கலாம்.
சந்திராஷ்மம் : . ஜூலை 15 முதல் ஜூலை 18 வரை
விருச்சிகம்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வெளியூர்ப் பயணங்கள், சக்ஸஸாகவும், இலாபகரமாகவும் அமையும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படாமல், எதையும் நல்ல யோசிச்சு செயல்படுவது நல்லதுங்க. அரசுப் பணியில் தங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அலுவலகத்தில் பிரமோஷன் பற்றிப் பிரச்சனைகள் எழலாம். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, நிம்மதி பிறக்கும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள்.
சந்திராஷ்மம் : . ஜூலை 18 முதல் ஜூலை 20 வரை
தனுசு
வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வியாபார நிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு தொழில் திறன் அதிகரித்து, அதன் காரணமாக, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரி யும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். நகரச் சந்தை நிலவரங்களை அறிந்து செய்யும் வியாபாரம் ஆதாயம் தரும். சிலருக்குக் கடல்  வாணிபம் பெருகி இலாபம் கிடைக்கும்.  
சந்திராஷ்மமம் : . ஜூலை 20 முதல் ஜூலை 22 வரை
மகரம்
பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். நிகழ்ச்சிகள்  நிறைவேறப் பல பிரார்த்தனைகள் மேற்கோள்வர். சிலருக்குக் கையில் பணமும், மனதில் மகிழ்ச்சியும் நிலவும். மக்கள் தலைவர் ஆகும் வாய்ப்பு சிலருக்கு அமையலாம். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். தொழிலிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுயதொழில் புரிவோர் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், தொழிலில் அபிவிருத்தி  நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். பல நாள் மீட் பண்ணாத ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ணுவீங்க.
சந்திராஷ்மமம் : . ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை
கும்பம்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பழைய கடன்கள் சுலபமாக வசூலாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள். உடன் பிறப்புக்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது.
மீனம்
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் அடைவீர்கள். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொலை தூரப்பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம்.  வீண் அலைச்சல்கள் ஏற்படும். ஆயினும், பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரி களின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.  எதிரிகளின் பணமும் வந்து சேரும்.  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும்.

More articles

Latest article