வார ராசிபலன்: 17.05.2019 முதல் 23.05.2019 வரை – வேதா கோபாலன்

மேஷம்  

 உங்களுக்கு  இத்தனை காலம் வெறுத்திருந்த வாழ்க்கையின் இனி சுவாரஸ்யம் பிடிக்கும். கையில் கார்ட்கள் இருக்கிறதே என்று கடைகடையாய்த் தேய்த்து சந்தோஷம் வாங்குவீங்க. வேண்டிய விஷயத் துக்கே சற்று அதிகமாகக் கவலைப்படறீங்க. வேண்டாததற்கு மிக அதிகமாக! இத்தனை காலம்  இருந்த நிலைக்கு இப்போ எவ்வளவோ தேவலைதானே? ….பெரிசாய் ஏதோ வந்துடுச்சு போல இருக்குன்னு நினைச்சு, ஒரு எறும்புக்கடிக்கு, ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வரைக்கும் கற்பனைலயே போயிடாதீங்க.. அதென்ன அப்படி ஒரு தன்னம்பிக்கையின்மை?    உங்களை நீங்களே தைரியப்படுத்தித் தன்னம்பிக்கை டானிக் ஊட்டிக்குங்க பார்ப்போம்.

 சந்திராஷ்டமம் : மே மாதம் 18 முதல் மே மாதம் 21 வரை

ரிஷபம்

இத்தனை காலமாய் மம்மி பற்றி நீங்கள் பட்ட கவலைகள் கற்பூரம் மாதிரிக் காணாமல் போயிருக்குமே! எனினும் சற்று கேர்ஃபுல்லாக அவங்களைப் பற்றி அதிகப்படி கவனம் செலுத்துங்க. பல காலம் பார்க்காத உறவினர்களை சந்திக்க சந்தர்பம் அமையும். கணவரின்/ மனைவியின் உடல் நலனை கவனிங்க. . உங்களைப் பரம எதிரியாக நினைத்தவர் நல்ல முறையில் வேறு வேலைக்குப் போய்விடுவதால் நிம்மதி என்றால் என்னவென்று பல காலம் கழித்து இப்பதான் உணர்வீங்க. உங்களுடைய இனிய பேச்சுக்கு ரசிகர் மன்றமே உள்ளது. தக்க வெச்சுக்குங்க. நம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகமானாலும் அதையும் சவாலாய் நினைச்சு ஜமாய்ப்பீங்க. குட் லக்

சந்திராஷ்டமம் : மே மாதம் 21 முதல் மே மாதம் 23 வரை

மிதுனம்

போற்றுவார் போற்றட்டும் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் தூற்றட்டும். இப்ப உங்க கடமைக்ளைச் சரியாத்தான் செய்துக்கிட்டிருக்கீங்க. மனச் சாட்சிக்கு பயந்து நடந்துக்குங்க போதும். உங்க இயல்பை மாற்ற வேண்டாம். அதுக்காக யாரையும் வெறுக்கவும் வேண்டாம். காரணம் உங்களுக்குக்கூடிய சீக்கிரத் தில்  விளங்கும். பொன்னும் பொருளும் நிறைய சேரும். அவ்வப்போது பேச்சையும் மனசையும் வைரஸ் ஸ்கேன் செய்துக்குங்க. எல்லோரிடமும் கட்டாயமாக அனுசரித்துப் போயே ஆக வேண்டும். விஷப் பூச்சிகளிடம் விளையாடிக் கொஞ்சும்படியான இடங்களுக்கு செல்லாமல் விலகியே இருங்க.

கடகம்

பாஸ் போர்ட்.. விஸா.. பிராவிடன்ட் ஃபண்ட்.. பென்ஷன் போன்றவை மிகச் சுலபமாக நிறைவேறும். இத்தனை காலம் இருந்து வந்த சிக்கல்கள் தீரும் துரிதமான செலவுகள் சற்றும் எதிர்பாராமல் மின்னல் வேகத்தில் வந்து போகும். இட்ஸ் ஓகே. பயந்து நடுங்காதீங்க.  மன நிறைவோடு செய்யக்கூடிய செலவாய்த்தான் இருக்கும். ஏற்கனவே உள்ள கவர்ச்சி அம்சம் மேலும் அதிகமாகும். எதிர்பாலினத்தினர் உங்களைப் பாராட்டுவாங்க. உத்யோகம் சம்பந்தமாக நிறையப் பொறுப்புகள் சுமக்க வேண்டியிருக்கும். முகம் சுளிக்காமல் புன்னகையுடன் நிறைவேற்றுங்கள். வேலைப்பளு அதிகமாக ஆக.. அதற்கான வருமானமும்  அதிகமா வரப்போகுதே. அரசாங்க சம்பந்தப்பட்ட ஆர்டர்கள் வேலைகள் செய்வீங்க.

சிம்மம்

பிரச்சினை எதுவானால்தான் என்ன? இந்த வாரக்கடைசிக்குள்ளயே பட்டுப் போல் சரியாகி கிண்ணுன்னு எழுந்து உட்கார்ந்துடுவீங்க. திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடக்குதா? வாழ்த்துக்கள். எப்பப்பார்த்தாலும் எதுக்கு டென்ஷன்.. சோகம்? சும்மா ஈஸியா இருங்க? சிரிங்க. நல்ல செய்தி இதோ வாசனைத் தேடி வந்துகிட்டே இருக்கு.  அதென்ன அவ்ளோ அகல வாயச்சவடால்?  கொஞ்சம் உங்க வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? வேறு வேறு வேலை மாறுவதைப் பொழுது போக்கு மாதிரியோ விளை யாட்டுப் போலவே செய்யாதீங்க. இப்போ வேறு வேலை மாற வேண்டுமா என்று யோசிச்சுக்குங்க. 

கன்னி

தேர்வுக்குப் படிக்கறவங்கள் ஒரு பத்து பர்சன்ட் முயற்சியை அதிகமாய்த் தாளிக்கணும், கவனத்தை அதிகரிக்கணும். பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு.  நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குறிப்பாக குடும்பத்தில் சந்தோஷம் டான்ஸ் ஆடும். முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாது.  ஆனாலும் ஒரேயடியாய் ரிலாக்ஸ் ஆயிட வேண்டாம். அதே பொறுப்புணர்வுடன் செயல்படுங்க. அதற்கேற்ற சூப்பர் பலன் உண்டுங்க. கிரவுண்ட் / ஃப்ளாட்டுக்குப் பத்திரம் பதியப் போறீங்க. கங்கிராட்ஸ். மனசெல்லாம் இனிப்பும் மென்மையும் இருக்கையில் வெளியில் ஏன் எறிந்து விழுந்து கோபக்காரர் பட்டம் வாங்கறீங்க? சரியான பலாப்பழம் நீங்க.

துலாம்

கல்யாணம் கச்சேரின்னு மஜாவாய்ப் பொழுது போகும். ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போயே போச். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சின்னதாய் ஜுரம் வந்தா பெரிசா கவலை வேணாம். பேச்சினால் சந்தோஷமும் வெற்றியும் கிடைக்கும். குறிப்பாகக் குடும்பத்தில் குதூகலம் உத்தரவாதம்.  குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்த் வெப்பீங்க. . சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒவ்வென்றும் லாபம் அருளும். சின்னச் சின்ன ஆரோக்யப் பிராப்ளம்ஸ் திடீர்னு ஏற்பட்டாலும் அதே வேகத்தில் திடீர்னு சரியாயிடும். பூதக்கண் ணாடி வெச்சுப்பார்த்து கடுகு சைஸ் பிரச்சினையைப் பூசணிக்காய் என்று பயந்து பரிதவிக்க வேணாமுங்கோ. தொழில்..

விருச்சிகம்

வாழ்க்கை உங்களது பிரபலக்கோபத்தினால் சற்றே பிரச்சினைகளின் வாசல்கதவைத் தட்டிவிட்டு வருவீங்க. வாழ்க்கை ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டிருந்த நிலைமை மாறி இப்போது பொன்னியின் செல்வனில் வரும் குதிரையின் வேகத்தில் சூடுபிடிக்கும். கட்லெட் சமூசாவுக்கெல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் குடுத்துச் சாப்பிடுங்க. அலுவலகத்தில் திடீர்னு உங்களைக்கூப்பிட்டு உயரத்தில் உட்கார வைப்பாங்க. அத்தனையும் நீங்க இத்தனை காலம் உழைச்ச உழைப்பின் பலன்தான். அட.. அதெப்பிடிக் கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! வாழ்த்துகள். பலே . பலே. திடீர்னு முகவரி மாறலாம். மனதளவில் தயாரா இருங்க. எனி  வே.. சந்தோஷ மாற்றம்தான்.

தனுசு

புதிய ஒப்பந்தங்கள் கண்ணாமூச்சி காட்டினாலும் கட்டாயம் கனிந்து மடியில் விழும் என்று நம்பிக் காத்திருக்கலாம். .. பெருமூச்சு விடுங்க…. அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். புதிய ஆடைகள். நகைகள், பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும். செலவுகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்க கையில்தான் இருக்கு. உங்க குழந்தைகள் பற்றி நீங்க சந்தோஷப் படும்படியான செய்தி உண்டு. கொஞ்ச நாளைக்கு வாயை செலோர் டேப் போட்டு ஒட்டிக்குங்க. கணவரோடு /மனைவியோட உளுஉளுவாக்கட்டிக்குக்கூட சண்டை வேண்டாம். அலுவலகம் சம்பந்தமான ஒரு நெருடல் தீர்ந்து சஸ்பென்ஸ் விலகி மகிழ்ச்சி மீளும்.

மகரம்

குழந்தைங்க பற்றி  எதுக்குத் தேவையே இல்லாமல் கவலைப் பட்டுக்கொண்டிருக்கீங்க? சூப்பராய்ச் சாதிப்பாங்க. இப்போதைக்கு உள்ளது தற்காலிகப் பிரச்சினை. மிகவும் தற்காலிகம்.  ஆரோக்யத்தை நல்லா கவனிச்சுக்குங்க. குறிப்பாய்க் காலில் அடி கிடி பட்டால் உடனேஏஏஏ ஆக்ஷன் எடுங்க.  உங்க புத்திசாலித் தனமான நடவடிக்கைகளால் நிறையப்பாராட்டு வாங்குவீங்க. குறிப்பா உங்க மனைவி/ கணவர் கிட்டேயிருந்து. அவங்களுக்கும் அலுவலகத்தில் பாராட்டு மழைதான். நீங்க ஆனாலும் ரொம்பதான் ஆரோக்யத்தை அலட்சியப்படுத்தறீங்க. முதல்ல அதைக் கவனிங்க.

கும்பம்

பேச்சு இருக்கே பேச்சு.. அதுக்கு ஒரு ஃபில்டர் போட்டுக்குங்க. அல்லது மூடியே போட்டுக்கிட்டாலும் நல்லதுதான். மற்றபடி, எதிலும் ஒரு நிதானப்போக்கும் நிச்சயமற்ற வேகமும் இருந்தாலும் எல்லாம் நல்லபடியா முடியும். குழந்தைங்களால் ஏற்படும் டென்ஷனைப் பெரிசாய் நினைச்சு வருந்தாதீங்க. ஓரிரு நாளில் எல்லாமே தலைகீழாகும். சிரிப்பும் மகிழ்ச்சியும் மீளும். பாஸ்போர்ட் விசா முயற்சிகள் மற்றும் அரசாங்கம் சம்பந்தமான மேட்டர்ஸ் ஜம்மென்று முடிந்து முகத்தில் புன்னகை வரையும் . நண்பர்களின் பல வகை உள்ளனர் அல்லவா? அவர்கள் மெல்ல மெல்ல மாறுவாங்க. அதாவது இத்தனை நாள் நீங்க பகைவர்கள்னு நினைச்சவங்க நல்லவங்கன்னும் நண்பர்கள்னு நினைச்சவங்க உங்க முதுகுக்குப் பின்னால பேசறவங்கன்னும் ஒரு வழியாப் புரிஞ்சுப்பீங்க.

மீனம்

வேண்டாத விஷயங்களில் நிறைய கவனம் செலுத்தறீங்களே.. முக்கியமான விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்க. மண்டையைக் குடைஞ்சுக்கிட்டிருந்ததே….ஒரு வழியாய் எல்லா சஸ்பென்சும் தீர்ந்ததா? சில மனிதர்களைப் புரிஞ்சுக்குவீங்க. நல்லவங்க இத்தனை காலம் கெட்டவங்களாவும் கெட்டவங்க இவ்ளோ நாள் நல்லவங்களாவும் தெரிஞ்சாங்க. அது அவங்க தப்பில்லைங்க. நீங்க அவங்களைச் சரியாப்புரிஞ்சுக்காம இருந்தீங்க. தட்ஸ் ஆல். அலுவலக விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாகும். குழந்தைகங்களால் பெருமிதம் வரும்

சந்திராஷ்டமம் : மே மாதம் 16 முதல் மே மாதம் 18 வரை

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 17.05.2019 to 23.05.2019, rasi palan
-=-