வார ராசிபலன்: 05/06/2020 முதல் 11/06/2020 வேதா கோபாலன்

Must read

மேஷம்

நீங்க பாட்டுக்கு நிம்மதியா இருங்க. கவலைப்பட்டு எதாவது ஆகப்போகுதா என்ன? சொல்ற வங்க சொல்லிட்டுப் போகட்டும். பண வரவு அதிகரிக்கும். உங்களின் திறமை வெளிப்படும். உங்க வார்த்தைக்கு மதிப்பு உயரும். தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். அதனால் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மத்தியில் கூடுதல் மதிப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்குத் தேவையற்ற பயணம் உண்டாகலாம். அதனால் அலைச்சல் ஏற்படக்கூடும். அதனால் என்னங்க? மகிழ்ச்சியான வாரம். உங்க கருத்துகளுக்கு மத்தவங்க மதிப்பளிப்பாங்க. பணவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்ப்புகள்  நிறைவேறும். நியாயத்தை தைரியமா எடுத்துச் சொல்வீங்க. நல்ல உழைப்பாளியாகவும் இருப்பீங்க. உயர்பதவியில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பீங்க.

ரிஷபம்

நீங்க  எடுக்கும் எந்த முயற்சிலயும் கூடுதல் உழைப்புக்கு பின்னரே வெற்றி கிடைக்கும். வீண் வம்பு, வழக்குகள் வரலாங்க. உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம். தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். எதிர் பாலினத்தவருடன் பழகும் போது கவனம் வேணுங்க. தொழில் வியாபாரம் விரிவாக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கெடைக்குங்க. கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பாங்க. தடைகள் உடைபடும்.குழந்தைங்களால நன்மை உண்டாகும். சந்தோஷம் கெடைக்குங்க.   

மிதுனம்

நியாயத்தின் பக்கம் நிற்பீங்க. விரும்பிய எல்லா வசதிகளும் உண்டாகும். உடல் ஆரோக்கி யம் சிறக்கும். மன தைரியம், நம்பிக்கை உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேணுங்க. சில விஷயங்களில் தடைகள் உண்டாகலாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வேலையில் பெரியளவில் முன்னேற்றம்  இல்லாட்டியும் மனசுக்கு சந்தோஷம் இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீங்க. பிள்ளைங்களை நல்லபடியா வழி நடத்துவீங்க. பிரபலங்கள் உதவுவாங்க. வீடு வாகனத்தை சரி செய்வீங்க. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீங்க. உத்தியோகத்தில் உங்க திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் வின் பண்ணும். கலைத்துறையில் உள்ளவங்க விருது வாங்க சான்ஸ் இருக்கு.

கடகம்

இதுவரை நடக்காமலிருந்த பல வேலைங்க  நல்ல முறையில் நடந்து முடியும். மனநிம்மதி கிடைக்கும். பொழுது போக்கு நிகழ்ச்சிங்க, விழாக்களில் கலந்து கொள்வீங்க. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். உங்களின் மதிப்பு உயரும். குடும்பத்தில் நிதான பேச்சு தேவை. கோபத்தை தவிர்க்கவும். பணியில் கவனமுடன் செயல்படுவதும், உயரதிகாரி களிடம் பேசும்போது நிதானத்தைக் கையாள்வதும் நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப்பின் நிறைவேறும். பெயர், புகழை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற முயற்சி செய்வது நல்லது.

சிம்மம்

பல வழிகளிலிருந்து பண வரவு இருக்கும். அதே சமயம் சுப செலவுகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த பல காரியங்கள் நடந்து முடியும். செயலை செய்து முடிக்கக் கூடிய சாமர்த்தியம் உண்டாகும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவீங்க. பயணங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.  கலைஞர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி உண்டாக்கும். மாணவமாணவியர் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நற்பலன் அடையலாம். விளையாட்டு போட்டிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வேணாங்க வீண்  அலைச்சல், பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வந்துடும்.  குடும்ப நிம்மதி  மெல்ல மீள ஆரம்பிக்கும். டோன்ட் ஒர்ரி.

கன்னி

இந்த வாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். எல்லாச் செயல்களிலும் நேர்த்தி இருக்கும். வெற்றியும் கிடைக்கும். துணிச்சலாக செயல்களை செய்து பாராட்டு பெறுவீங்க. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடு வீங்க. அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  சிலருக்குப் பூர்வீக சொத்துகளால் லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர் கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

துலாம்

உங்க ராசிக்காரங்களுக்கு.  இந்த வாரத்தில் சில கெட்ட கனவுகள் வரலாம். இதனால் தேவையற்ற பயம் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். உடல் உஷ்ணத்தால் பாதிப்பு இருக்கும். பண நெருக்கடி உண்டாகலாம். பேச்சில் நிதானம் தேவை. உங்களின் பேச்சு சிலருக்கு மனஸ்தாபம் ஏற்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் நல்ல பெயரை பெறுவாங்க.குடும்பத்தில் மகிழ்ச்சி  இன்கிரீஸ் ஆகும். கடந்தகால முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீங்க. பணவரவு  ஹாப்பியா இருக்கும். சமயோசித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும்

விருச்சிகம்

தானும், மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்கணும் என நினைக்கக் கூடியவங்க நீங்க, இந்த வாரம் உங்கள் வாழ்வில் மிக முக்கிய காலம். பேச்சு, செயலில் கவனமும், நிதானம் தேவை. உங்களின் உழைப்பு வீணாகலாம். அதனால் எதையும் திட்டமிட்டு செய்வது பலனை த் தரும். தொழில், வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் மற்றவரிடம் உங்களின் பொறுப்புக்களை ஒப்படைக்க வேணாம். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள்  வீட்டில் விரைவில்  பாப்பா அழும் சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். திசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு நான்கு  சக்கர வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

தனுசு

சாமர்த்திய பேச்சின் மூலம் காரியங்களை சமாளிப்பீங்க. பயணங்கள் சாதகமான பலனை தரும். மதிப்பு, மரியாதை உயரும். தொழில் வியாபாரம் சுமாரான பலனை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உருவாகலாம். குழந்தைகளிடம் கோபம் வேண்டாமேங்க. ப்ளீஸ். நிச்சயதாத்தம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வீங்க. அலுவலகத்தில் நிறை  குறைகள் இருக்கும். வேலையில் கவனமாக இருப்பது அவசியங்க. குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.  மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மிக  ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.

மகரம்

தொலை நோக்குடன் சிந்தித்து, நிதானமாக செயல்பட்டக்கூடியவங்க நீங்க, இந்த வாரம் உங்களின் சாதிக்கும் திறமை அதிகரிக்கும். முடிவு எடுப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், அதனை உங்கள் திறமையால் செய்து முடிப்பீங்க. பணவரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூற வேண்டாம். அப்படி கூறினால் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை இருக்கும். புதிய வேலை கிடைக்கலாம். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்ங்க. புதுமை படைப்பீங்க.

கும்பம்

இந்த வாரம் பேச்சு திறமை அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம்  நிறையக் கிடைக்கும். .தன வரவு அதிகரிக்கும். கடின உழைப்பு, முயற்சி பல நன்மைகளை தரும். உங்கள் செயல்கள் வெற்றியடைய யாரேனும் ஒருவர் துணை நிற்பாங்க. எதிரிகள் நீங்குவர். குடும்பத்தில் பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும்.  அலுவலகத்தில் செய்யும் முயற்சிகளுக்கு உடனடியாகப் பலன் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் கட்டாயம் நீங்கள் விரும்பும் ரிசல்ட்  உண்டு. அரசாங்கத்தின் உதவிங்க  கெடைக்குங்க. குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அது சம்பந்தமான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்

எந்த காரியமாக இருந்தாலும் தைரியமாகச் செயல்படுவீங்க. இந்த வாரம் உங்க வாழ்க்கைக்குத்  தேவையான புதிய வசதிங்களைச்  செய்துகொள்வீங்க. உறவினர்கள், நண்பர்கள் உதவுவர். ஆடை, ஆபரணம் சேரும். புதிய சொத்து வாங்கும் எண்ணமும் அதற்கான திட்டமிடலும் இருக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். அதே போல் இடமாற்றமும் உண்டாகலாம். குடும்ப பிரச்சினைகள் மறையும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். யாரிடமும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். பெண்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும்.

More articles

Latest article