தமிழ்மொழி இணைய செய்தித்தளங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை டாட் காம் (Patrikai.Com)  செய்திதளம் இன்று தனது 8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த 2015ம்ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட பத்திரிகை டாட் காம் இணையதளம், மெல்ல மெல்ல தவழ்ந்து, உருண்டு, எழுந்து, 7ஆண்டு களை நிறைவுசெய்து 8வது ஆண்டில் வாசகர்களின் பேராதரவுடன் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது..

தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளின் அரசியல் செய்திகள் மட்டுமின்றி விளையாட்டு, ஆன்மிகம், ஜோதிடம், சினிமா, சமையல், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல் சிறப்புகட்டுரைகள், தலைவர்களின் பிரத்யேக பேட்டி, மற்றும் அரசியல், சமூகம், சினிமா தொடர்பான  வீடியோ செய்தி (https://www.youtube.com/c/Patrikaidotcom/videos)  என உள்பட அனைத்து வகையான செய்திகளையும் நவரசத்துடன் வழங்கி வருகிறது.

வாசகர்களின் தேவையையும், எதிர்பார்ப்பையும் இயன்ற அளவிற்கு நிறைவு செய்து பன்முகத் தளமாக திகழும்   பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) இணையதளத்தின் வெற்றிக்கு காரணமான இணையதள வாசகர்களுக்கு எங்களின் மனங்கனிந்த நன்றியினை செலுத்த கடமைப்பட்டுள்ளோம். வாசகர்கள் தொடர்ந்து தங்களது நல்ஆதரவினை வழங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பத்திரிகை டாட் காம் தொடர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவரும், நிர்வாகத்தினர், முன்னாள், இன்னாள் செய்தி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும் பத்திரிகை டாட் காம் இணைய இதழ் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

                                                                                                                                                                                                        ஆசிரியர்.