சண்டிகர்: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனம் ‘வீவோ’ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த உரிமையைப் பெறுவதற்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாபா ராம்தேவிற்கு, பாஜக வட்டாரத்தில் செல்வாக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவன செய்தி தொடர்பாளர் எஸ்.கே.திஜாராவாலா கூறியதாவது, “ஐபிஎல் 13வது சீசன் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெறுவதற்கு பதஞ்சலி நிறுவனம் முயல்கிறது எனும் செய்தியை மறுக்கவில்லை. உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிப்போம் என்ற அடிப்படையில் உள்நாட்டு நிறுவனத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல இந்தப் போட்டித் தொடர் ஒரு நல்ல களமாக அமையும்.

இதைப் பெறுவதற்கு முயன்று வருகிறோம். ஆனால், இதுதொடர்பாக இறுதி முடிவை நிறுவனத்தின் தலைமைதான் எடுக்கும். ஸ்பான்ஸர்ஷிப் கிடைத்தால், அதை ஏற்கலாமா? வேண்டாமா? என்பதை இறுதியில் முடிவெடுப்போம்” என்று தெரிவித்தார்.