இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

நேற்று நடந்த ஐந்தாவது இறுதி டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஷாம்பெய்ன் பாட்டிலை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர்.

அப்போது ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கஜாவா மதுபானம் தன்மீது படாமல் தவிர்க்க அணியினருடன் இருந்து ஒதுங்கி நின்றார்.

https://twitter.com/buttsey888/status/1482675728470921220

இதனை கவனித்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்ற வீரர்களை மதுபாட்டில்களை கீழே வைக்க சொல்லிவிட்டு உஸ்மான் கஜாவாவை தங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார்.

கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த பண்பு சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.