2021 ம் ஆண்டு சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 ஆக குறைந்துள்ளது, இது 2020 ம் ஆண்டு 8.52 ஆக இருந்தது.

இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் ஏற்கனவே பொருளாதாரத்தில் தேக்க நிலையை சந்தித்து வரும் சீனா வரும் ஆண்டுகளில் மிகப்பெரும் பொருளாதார மற்றும் சமூக சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

1978 ம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பிறப்பு விகிதத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரும் சரிவை சீனா சந்தித்துள்ளது.

1949 ம் ஆண்டு கம்யூனிச நாடாக மலர்ந்தது முதல் ஒற்றை குழந்தைக்கு தாவிய சீனாவில் குழந்தை பிறப்பு இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது.

2016 ம் ஆண்டு முதல் சீனர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதியளித்தும் சீனர்கள் அதை விரும்பியதாக தெரியவில்லை.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை மூன்றாக உயர்த்திய நிலையிலும் சீனர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வம் குறைந்து வருவது அந்நாட்டின் சமூக அமைப்பில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

2021 ம் ஆண்டு 1.06 கோடி குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர் சரிவில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.