டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்ந்துள்ளது.  அதேவேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 824  ஆக அதிகரித்து உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று காலை (26/04/2020) மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

இந்தியா தற்போதைய ஒரு வாராக் காலகட்டத்தில் கொரோனா தொற்று பரவலில் பெரிய அளவில் முன்னேற்றத்தினை கண்டு இருப்பதாகவும்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை 16,000 என்கிற அளவில் இருந்த தொற்று எண்ணிக்கை இன்று 26,000 என்கிற அளவை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அரசு கூறியுள்ளது.

கொரோனா தொற்றால் இதுவரை  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கிட்டதட்ட 68 சதவிகிதம் 27 மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்டு  உள்ளதாகவும், அந்த  மாவட்டங் கள் அதிக சுமை கொண்ட மாவட்டங்களாக (high load districts) அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொற்று பரவுகிறது.

கொரோனா தொற்று பரவல் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்றவை அதிக சுமை கொண்ட மாவட்டங்களாக (high load districts)  குறிப்பிடத்தக்க மாநிலங்களாகும்.

தேசிய அளவில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையில் 13.8 சதவிகிதம் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 47.6 சதவிகிதம் கொரோனா நோயாளிகள் மும்பையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுவரை 5,800 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த வாரம் 14.19 சதவிகிதமாக இருந்த குணமடைந்தவர்களின் அளவானது, தற்போது 21.09  சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 741 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்றால் 7,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் காணப்பட்டும்   மும்பையில் மட்டும் கிட்டதட்ட 5,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் புதியதாக 811 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியான மும்பை தாராவியில் இதுவரை 240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இங்கு  62 சதவிகிதத்தினர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.