பாஸ்போர்ட் விசாரணை: பெண்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் வேண்டும்- மேனகா காந்தி!

Must read

தூங்காரே:
பாஸ்போர்ட்டில் பெண்களுக்கான உரிமை அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
பாஸ்போர்ட் அலுவலங்களில் கேட்கப்படும் கேள்விகள் தொடர்ந்து பெண்களை அலைக்கழிப்பதாகவும் எரிச்சலுட்டவதாகவும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜாலனா தூங்கரே பாஸ்போர்ட் அலுவலகத்தில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுனையா சர்மா, ஒன்பது வருடங்களுக்கு முன் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டார். ஏனினும் 18 வயதான தன் மகளுக்கு பாஸ்போர்ட் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அங்கே இருந்த அதிகாரி சர்மாவின் மகளிடம் ” நீ ஏன் உன் தந்தை பெயரை போடவில்லை, அவரை உனக்கு பிடிக்காதா?” என வினாவியுள்ளார். கோபமடைந்த சர்மா “இது உங்களுக்கு தேவையில்லாதது” என கூறி வெளியேறியுள்ளார்.
பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்க, ஒரு பெற்றோரின் ஆதாரம் போதும் என்பதை வலியுறுத்தி சர்மா, இணையத்தில் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கினார். இதில் சுமார் 52000 பேர்கள் அவருக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.
menaka
பாஸ்போர்ட் அலுவலகங்கள் பொதுவாக பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதில்லை. ஒரு பெண் திருமணமானால் அவளது தகப்பன் பெயருக்கு பதிலாக அவரது கணவன் மாற்ற வேண்டும் என்கிறார்கள். அவளது கணவன் பெயரை நீக்கவேண்டுமென்றால் விவாகரத்து நகல் கேட்டு சிரமப்படுத்துகிறார்கள்.
குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்  விசயத்திலும், குழந்தை தாய் பொறுப்பில் இருந்தாலும் தந்தையின் பெயரை கொடுக்க கட்டாயப்படுத்துகின்றனர்.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி இது குறித்து கூறுகையில், “தற்போது விவாகரத்துகளும் பிரிவுகளும் அதிகரித்து வரும் நிலையில், பெண்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். சுஷ்மா சுவராஜ் அவர்கள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
சில உயர்நீதிமன்றங்கள் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிவிட்டபோதும். அதிகாரிகள் அதை கடைபிடிப்பதில் மெத்தனமாக உள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹரியானா மற்றும் பன்சாப் நீதிமன்றங்கள் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article