டில்லி:
பால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்குவதற்கான திட்டம்  விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு செல்லாமல் இனி தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
இன்றைய காலத்தில், வெளிநாட்டு வேலை மோகத்தில் பாஸ்போர்ட் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்லூரி படிப்பு படிக்கும்போது  பெரும்பாலானோர் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து வாங்கிவிடுகின்றனர்.
passport
இதன் காரணமாக பாஸ்போர்ட் அலுவலகம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இதனால் ஏற்படும் காலதாமதங்களை தவிர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பல மாற்றங்களை செய்த போதும், புதிய பாஸ்போர்ட் வழங்குவதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கு போதிய ஊழியர்கள் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.
இதனால் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தபால் அலுவலகத்தில்  பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெற்று, தக்க ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அங்கேயே கொடுக்கவும், பாஸ்போர்ட் வெரிபிகேஷன் முடிந்தபிறகு, பாஸ்போர்ட் விநியோகமும் தபால் அலுவலகம் மூலமே நடைபெறும்.
இத்திட்டம் முதலில் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது  குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறத என்றனர்.
பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் கையாளும் முறை மூன்று கட்டமாக நடக்கிறது.  இப்போது தபால் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பம் தந்தவுடன், இதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு, பாஸ்போர்ட்டை தபால் அலுவலகம் ஸ்பீடு போஸ்ட் மூலம் வழங்கும் என்று தெரிகிறது.